Glow Facial at Home
பெண்கள் ஏதவாது சுப நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் பார்லருக்கு சென்று தன்னை அழகுபடுத்தி கொள்வார்கள். பார்லருக்கு சென்று தன்னை அழகுபடுத்தி கொண்டாலும் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ளும், சிறிது நேரம் ஆனவுடன் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் வீட்டிலியே முக பளபளப்பிற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டிலேயே முக பளபளப்பிற்காக பேசியல் செய்வது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஸ்டேப் 1 Cleanser:
முதலில் சிலேன்செர் செய்ய வேண்டும் அதற்காக ஒரு பவுலில் பால் 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்.
ஸ்டேப் 2 Glow Scrub:
அடுத்து ஒரு பவுலில் உருளைக்கிழங்கு சிறிதளவு எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு சிறிதளவு, தயிர் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு மிக்ஸ் செய்து வைத்துள்ள பேக்கை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை ஒரு காட்டன் துணியால் துடைத்து விடவும்.
நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க 2 சொட்டு தடவினால் போதும்..
ஸ்டேப் 3 Glow Massage:
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 3 தேக்கரண்டி பால், அதனுடனே ஓட்ஸ் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும், பாலுடன் ஓட்ஸ் மிக்ஸ் ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும். இந்த பேக் ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைத்து விடவும்.
ஸ்டேப் 4 Glow Face Pack:
சிறிய உருளைக்கிழங்கு ஒன்று, சிறிய தக்காளி ஒன்று சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அரைத்த பேக்கை வடிகட்டியில் வைத்து வடிக்கட்டி சக்கை இல்லாமல் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். அந்த சாற்றுடன் கடலை மாவு சிறிதளவு, மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து மசாஜ் முகத்தை கழுவி விடவும்.
நீங்கள் ஏதவாது Function-க்கு செல்வதற்கு முதல் நாள் மேல் கூறப்பட்டுள்ளது போல் வரிசையாக செய்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |