வெயிலில் பட்டாலும் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க இதை செஞ்சு பார்த்தீங்களா..!

glowing skin naturally at home fast in tamil

Glow Skin Naturally at Home Fast

எப்போது எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் மாற்றம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் கட்டாயமாக இருக்கு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. மனிதனுடைய வாழ்க்கையில் இவ்வளவு மாற்றங்கள் வரும் போது நம்முடைய முகத்தில் பருக்கள் மற்றும் கருத்து போதல் போன்ற மாற்றங்கள் வராது என்று நம்மால் கூற முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முகம் வெயிலில் பட்டாலும் கூட பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை இருக்கும். அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று நீங்களும் ஏதாவது ட்ரை செய்து கொண்டு தான் இருப்பீர்கள். அதனால் தான் உங்களுடைய விருப்பம் படி முகத்தை பளிச்சென்று மாறச் செய்வதற்கான ஒரு Home Remady பற்றி இன்று தெறிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பளிச்சென்று மாற: 

நம்முடைய கடுமையான வெயிலில் பட்டாலும் கூட முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு Face Pack தயார் செய்து அதனை முகத்திற்கு எப்படி அப்ளை செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு- 1

முகம் பளிச்சென்று மாற

தேவையான பொருட்கள்:

  • அதிமதுரம் பவுடர்- 1 தேக்கரண்டி 
  • அரிசி கழுவிய தண்ணீர்- 1 தேக்கரண்டி 

செய்முறை:

அரிசி கழுவிய தண்ணீரில் நிறைய சத்துக்கள் இருக்கிறது. ஆகையால் அதனை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகம் இயற்கையாகவே பளிச்சென்று மாறி விடும்.

அதனால் ஒரு பவுலில் அரிசி கழுவிய தண்ணீர் 1 தேக்கரண்டி மற்றும் அதிமதுரம் பவுடர் 1 தேக்கரண்டி இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை: 

இப்போது தயார் செய்து வைத்துள்ள Face Pack-கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் முகம் பளபளப்பாக இருக்கும். 

இதையும் படியுங்கள்⇒ 5 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாறிவிடும்..! இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

குறிப்பு- 2

முகம் பளிச்சென்று இருக்க

 

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு- 1 தேக்கரண்டி 
  • ஆரஞ்சு தோல் பவுடர்- 1 தேக்கரண்டி 
  • தேன்- 2 தேக்கரண்டி 

செய்முறை:

 ஆரஞ்சுப்பழ தோலில் வைட்டமின் C, ஆண்டிஆக்ஸைட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. ஆகையால் இதனை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகம் பளபளப்பாகவும் மற்றும் வெள்ளையாகவும் இருக்க செய்யும்.  

அதனால் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு 1 தேக்கரண்டி, ஆரஞ்சு தோல் பவுடர் 1 தேக்கரண்டி மற்றும் தேன் 2 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது முகத்திற்கு ஃபேஸ் பேக் தயார் ஆகிவிட்டது.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் ரெடி செய்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இப்போது உங்களுடைய முகத்தை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அந்த அளவிற்கு பளிச்சென்று இருக்கும். 

மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்தால் போதும்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. இதை தடவியவுடன் நரைமுடி கருமையாக மாறிவிடும் மற்றும் முடி அடர்த்தியாக வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil