உங்களுடைய முடி அடர்த்தியாக இருக்கிறதா பாத்து நீங்க என்ன எண்ணெய் முடிக்கு யூஸ் பண்றீங்கனு கேட்கனுமா..! அப்போ இந்த எண்ணையை ட்ரை பண்ணுங்க

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

எல்லா பெண்களுக்கும் முடி ஒரு தனி அழகினை கொடுக்கும். அதனால் பெண்கள் பெரும்பாலும் முடியினை பார்த்து பார்த்து பராமரித்து வருவார்கள். ஆனால் சிலருக்கு முடியினை பராமரிக்க நேரமே இருக்காது. அதனால் கடையில் விற்கும் ஏதாவது ஒரு எண்ணெயினை வாங்கி அப்ளை செய்து பார்ப்பார்கள். சில  நாட்களுக்கு பிறகு பார்த்தால் நம்முடைய முடியில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் முடி இருந்த படியே இருக்கும். இவற்றை எல்லாம் நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் வீட்டில் இருக்கும் வெந்தயத்தினை மட்டும் வைத்து இயற்கையான முறையில் எண்ணெய் தயாரித்து முடியினை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே அந்த எண்ணெயினை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்:

 வெந்தயத்தில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, சோடியம், பொட்டாசியம், கொலஸ்ட்ரால், இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. 

இத்தனை சத்துக்கள் நிறைந்த வெந்தயத்தை வைத்து எண்ணெய் தயாரித்து முடிக்கு தடவினால் போதும் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள்:

  1. ஆவாரம் பூ- சிறிதளவு 
  2. செம்பருத்தி பூ- 5
  3. வெட்டி வேர்- 1 கைப்பிடி
  4. சடா மாஞ்சு- சிறிதளவு
  5. கடுக்காய் தோல்- 1 கைப்பிடி அளவு
  6. கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
  7. பெரிய நெல்லிக்காய்- 3
  8. வெந்தயம்- 1 ஸ்பூன்
  9. தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர்

இதையும் படியுங்கள்⇒ முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

Hair Grow Thicker Naturally For Hair Oil:

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்

ஸ்டேப்- 1

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

அதன் பின்பு அதில் எடுத்துவைத்துள்ள ஆவாரம் பூவினை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். ஆவாரம்பூ முடியினை நன்றாக வளர செய்வதற்கு நல்லது. 

ஸ்டேப்- 2

ஒரு 5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் எண்ணையுடன் 5 செம்பருத்தி பூ மற்றும் நசுக்கி வைத்துள்ள 3 பெரிய நெல்லிக்காய் இரண்டினையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் இரண்டிலும் நரை முடியினை வராமல் தடுப்பதற்கான சத்துக்கள் உள்ளது.

ஸ்டேப்- 3

இப்போது அடுப்பில் இருக்கும் எண்ணையுடன் 1 கைப்பிடி அளவு கடுக்காய் தோல் சேர்த்து எண்ணெயினை கலந்து கொண்டே இருங்கள். எண்ணெயில் இருக்கும் பொருட்கள் கருகாத அளவிற்கு பார்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு இப்போது எடுத்துவைத்துள்ள வெந்தயம், கருஞ்சீரகம் மற்றும் சடாமாஞ்சு போன்ற அனைத்தினையும் எண்ணெயில் சேர்த்து எண்ணெயினை 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

2 நிமிடம் கழித்த பிறகு கடைசியாக வெட்டி வேரினை அதில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த எண்ணெயினை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி விடுங்கள். பாட்டிலில் எண்ணெயினை ஊற்றும் போதும் வெட்டி வேர் மட்டும் கடுக்காய் தோலினை அதில் போட்டு கொள்ளுங்கள்.

உங்களுடைய முடியின் வளர்ச்சியினை அதிகரிப்பதற்கான எண்ணெய் தயார் ஆகிவிட்டது. ஆனால் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை 2 நாட்கள் பிறகு தான் முடிக்கு அப்ளை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தேய்த்தால் எல்லாரும் கேட்பாங்க எப்படி இவ்ளோ முடி வளர்ந்துச்சுனு

எண்ணெயினை முடிக்கு அப்ளை செய்தல்:

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

2 நாட்கள் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை ,முடிக்கு தினமும் தடவினால் போது முடி நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அடர்த்தியாக வளர்ந்து விடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil