ஆண்களின் தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Hair Growth Tips for Men in Tamil 

Hair Growth Tips for Men in Tamil 

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வு தான். அதனை சரியாக கவனிக்காமல்விட்டால் தலைமுடி உதிர்வு அதிகரித்து தலையில் வழுக்கை வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்களுக்கும் தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் அதனை சரியாக கவனித்து வழுக்கை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்தவகையில் இன்றைய பதிவில் ஆண்களின் தலைமுடி உதிர்வை குறைத்து அவர்களுக்கு வழுக்கை வராமல் தடுப்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Male Hair Grow Faster Naturally in Tamil:

டிப்ஸ் – 1  

How to make male hair grow faster naturally in tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ரோஸ்மேரி இலை – 8 டீஸ்பூன் 
  2. புதினா இலை – 2 கைப்பிடி அளவு 
  3. துளசி – 2 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர் – 2 கப்  

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதனுடன் 8 டீஸ்பூன் ரோஸ்மேரி இலை, 2 கைப்பிடி அளவு புதினா இலை மற்றும் 2 கைப்பிடி அளவு துளசி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி நன்கு ஆற விடுங்கள். இப்போது அதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி உங்களின் தலைமுடிகளின் வேர்களில் படுமாறு நன்கு ஸ்பிரே செய்துகொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>ஒரே வாரத்தில் உங்களின் முடி உதிர்வை நிறுத்தி புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!

இதனை தலையில் ஸ்பிரே செய்வதற்கு முன்னால் நீங்கள் நன்கு தலை குளித்திருப்பது நல்லது. இதனை ஸ்பிரே செய்த பிறகு நீங்கள் தலைக்கு குளிக்கவேண்டாம். இதனை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வதை தடுத்து நன்கு முடி வளர உதவிபுரியும்.

டிப்ஸ் – 2

How to grow hair faster naturally in a week in tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஆளி விதைகள் – 1 கைப்பிடி அளவு 
  2. தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – 1 கப் 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதனுடன் 1 கைப்பிடி அளவு ஆளி விதைகள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி சிறிது நேரம் ஆற விடுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும்1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்களின் தலையில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பிறகு தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வதை தடுத்து நன்கு முடி வளர உதவிபுரியும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil