முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த கற்றாழை மட்டும் போதுமா ஆச்சரியமா இருக்கே

Advertisement

கற்றாழை தேய்த்தால் முடி வளருமா

இன்றைய காலத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி சந்திக்கின்ற பிரச்சனைகளில் முடி உதிர்வு, மற்றும் முடி வளரவேயில்லை இந்த இரண்டும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். இயற்கையான முறையில் கற்றாழை மட்டும் இருந்தால் போதும் உங்களின் முடி வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். அது எப்படி என்று இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை: 

கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை

உங்களது முடிக்கு தேவையான அளவு கற்றாழை எடுத்து கொள்ளுங்கள். கற்றாழையை கழுவி விட்டு அதனின் மேல் தோலை சீவி உள் பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லை மிக்சியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த கற்றாழை ஜெல்லை வடிக்கட்டி வைத்து வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது பார்த்தீர்கள் என்றால் அடி பகுதியில் சக்கை இல்லாமல் தண்ணீராக இருக்கும். இந்த கற்றாழை தண்ணீரை வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ முடியின் வளர்ச்சியை இரண்டு மடங்கு அதிகரிக்க இந்த ஒரு பொருள் போதும்.!

அப்ளை செய்யும் முறை:

கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை

முதலில் தலை முடியில் சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயாரித்து வைத்திருக்கின்ற கற்றாழை தண்ணீரை முடியின் ஒவ்வொரு பகுதியாக எடுத்து தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வரை வைத்திருங்கள். பின் 20 நிமிடம் கழித்ததும் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை தலையில் முடி முழுவதும் ஒரு மசாஜ் செய்து கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் தடவிய பிறகு 20 அல்லது 30 நிமிடம் தலையில் அப்படியே ஊறட்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை வைத்து தலை தேய்த்து குளித்து விடுங்கள்.

 இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். கற்றாழையில் வைட்டமின் A, C, E போன்ற சத்துக்கள் இருக்கிறது. மேலும் வைட்டமின் B 12 Folic Acid போன்றவை இருப்பதால்  தலை முடியில் உள்ள பொடுகு நீங்கும். மேலும் முடி வலிமை, முடி பளபளப்பு, முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.  

இதையும் படியுங்கள் ⇒ உங்களின் தலை முடியில் இந்த தவறுகளை செய்தால் அவ்ளோ தான்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement