உங்களின் தலை முடியில் இந்த தவறுகளை செய்தால் அவ்ளோ தான்..!

hair maintain tips in tamil

முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் தலை முடியில் செய்ய கூடாத தவறுகளை தெரிந்து கொள்வோம். முடி கொட்டுகிறது என்று கவலை படுவார்கள். ஆனால் அந்த முடி எதனால் கொட்டுகிறது என்று யோசிக்க மாட்டார்கள். நீங்கள் அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகளால் முடி கொட்டும். உங்களின் முடி உதிராமலும், முடியை பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஆண்கள் தலை முடியை பராமரிக்கும் பொழுது செய்யும் சில தவறுகள்

முடியை பராமரிப்பது எப்படி.?

 தலைமுடி பராமரிப்பு

தலை துவட்டும் முறை:

நீங்கள் தலை குளித்ததும் தலையை நன்கு காய வைக்க வேண்டும். தலை குளித்ததும் தலையில் கட்டும் துணியானது காட்டன் துணியாக இருக்க வேண்டும். எதற்காக என்றால் காட்டன் துணி தான் தலையில் உள்ள ஈரத்தை இழுக்கும். நீங்கள் தலையில் கட்டும் துணியானது 10 நிமிடம் மட்டும் தான் கட்ட வேண்டும். 

முட்டை பேக்:

 முடி பராமரிப்பது எப்படி ஒரு கிண்ணத்தில்  தயிர் மற்றும் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து கலந்து கொள்ளவும்.  இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் தலையில் அப்ளை செய்யுங்கள். இந்த பேக்கை அப்ளை செய்து  10 நிமிடம் வைத்து தலையை நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை கொண்டு அலசுங்கள். 

தலையை சீவுவது:

 முடியை பராமரிப்பது எப்படி

நீங்கள் தலையை தினமும் சீவ வேண்டும். நீங்கள் வெளியில் செல்ல வேண்டியதில்லை என்று அன்று தலை சீவாமல் இருப்பீர்கள். இப்படி இருப்பது ரொம்ப தவறான விஷயம். தினமும் தலை சீவுவது அவசியமானது. 

ஆயில் மசாஜ்:

hair maintain tips in tamil

 

நீங்கள் தலையில் எண்ணெய் தடவும் போது முழு தலைக்கும் மசாஜ் செய்ய வேண்டும். முடிகளின் வேர் வரை செல்லும் வரையில் எண்ணெயை தடவ வேண்டும். முடியின் ஒவ்வொரு பக்கமாக எடுத்து எண்ணெயை தடவுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது:

வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் வைத்து குளிப்பது அவசியமானது. அந்த எண்ணெயை உச்சி முதல் வேர் வரை தடவ வேண்டும். நீங்கள் எண்ணெயை ஒரு 1 மணி நேரம் தலையில் வைத்து அதன் பிறகு குளிக்க வேண்டும். 

தலை குளிக்கும் போது எக்காரணத்தை கொண்டும் வெந்நீரில் குளிக்காதீர்கள். இல்லை நான் வெந்நீரில் தான் குளிப்பேன் என்றால் குறைவான சூடு வைத்து குளியுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami