30 நாட்களில் முடி நீளமாக வளர செய்யும் இந்த ஹேர் ஆயில்..!

கருவேப்பிலை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி? – Herbal Hair Oil Preparation in Tamil..!

Herbal Hair Oil Preparation in Tamil:- கருவேப்பிலை ஒன்று போதும் கூந்தலின் வளர்ச்சிக்கு. ஆம் நாம் சமையலில் அதிகளவு பயன்படுத்தும் இந்த கருவேப்பிலையின் மருத்துவ குணம் பற்றி நமக்கும் தெரிந்திருக்கும். கருவேப்பிலையை காலையில் எழுந்தவுடன் ஒரு கொத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ஆனால் இப்போது உள்ள இளசுங்க இந்த டிப்ஸை ரெகுலரா பாலோ பண்ணுங்கனு சொன்ன யாருமே கேக்கமாட்டாங்க. அதனால இந்த பதிவில் 30 நாட்களில் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க இரண்டு வகையான ஹேர் ஆயில் தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முடி உதிர்வு நீங்க..! முடி அடர்த்தியாக வளர..! ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

No: 1

தேவையான பொருட்கள் / Herbal Hair Oil Ingredients in Tamil:-

 • தேங்காய் எண்ணெய் – 500 கிராம்
 • வெந்தயம் – ஒரு ஸ்பூன்
 • கருவேப்பிலை – ஒரு கப்

கருவேப்பிலை எண்ணெய் செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அவற்றில் 500 கிராம் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பிறகு மிக்சியில் கருவேப்பிலையை தண்ணீர் ஊற்றி பொடிதாக அரைத்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த ஒரு கப் கருவேப்பிலையை 500 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாக பொரிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் வெந்தையம் சேர்த்து நன்றாக பொரிக்க வேண்டும்.

கருவேப்பிலை நன்றாக பொரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும்.

பின் ஒரு சுத்தமான துணியால் எண்ணெய்யை வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:-

herbal hair oil

இந்த எண்ணெய்யை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். மிகவும் வாசனையாக இருக்கும். இந்த ஹேர் ஆயிலை தினந்தோறும் தலைக்கு கூந்தல் எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

இல்லையெனில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலை அலசுங்கள்.

இவற்றில் ஏதோனும் ஒரு முறையை பின்பற்றி வர, எண்ணி 30 நாட்களில் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.

முன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா?

 

No: 2

தேவையான பொருட்கள் / Herbal Hair Oil Ingredients in Tamil:-

 • நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
 • தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
 • கற்றாழை – ஒரு மடல்
 • வெந்தயம் – ஒரு ஸ்பூன் (ஊறவைத்தது)
 • மருதாணி – ஒரு கைப்பிடியளவு
 • கருவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு
 • செம்பருத்தி பூ – 20
 • மிளகு – 10
 • சிறிய வெங்காயம் – 10 (பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்)
 • நெல்லிக்காய் – 5 (பொடிதாக சீவிக்கொள்ளுங்கள்)
 • காற்று புகாத பாட்டில் – ஒன்று

தலை முடி வளர கூந்தல் எண்ணெய் செய்முறை:-

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

பின்பு 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 லிட்டர் நல்லெண்ணெய் இவை இரண்டையும் சேர்க்க வேண்டும்.

பின் அடுப்பில் வைத்து அதிக தீ மூட்டி 5 நிமிடங்கள் நன்றாக சூடேற்ற வேண்டும். எண்ணெய் பொங்கி வரும்பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

அதாவது எண்ணெயில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் நன்றாக பொரிந்து வரும் அளவிற்கு எண்ணெயை நன்றாக காய்ச்ச வேண்டும்.

பிறகு எண்ணெய்யை ஒரு சுத்தமான கார்டன் துணியால் வடிகட்டி காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி தினமும் தலைக்கு கூந்தல் எண்ணெய்யாக பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:-

herbal hair oil

காய்ச்சிய இந்த கூந்தல் எண்ணெய்யை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து வட்ட இயக்கத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு மணிநேரம் கழித்து தலை அலசலாம் இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.

அல்லது தினந்தோறும் தலைக்கு கூந்தல் எண்ணெய்யாக பயன்படுத்தி வரலாம்.

இந்த எண்ணெய்யை பயன்படுத்திய ஒரு மாதத்திற்குள் நல்ல மாற்றத்தை உணருவீர்கள்.

தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்

 

குறிப்பு:-

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு வகை எண்ணெயில் தங்களுக்கு எந்த முறை எளிமையாக உள்ளதோ அந்த முறையை ட்ரை செய்து பாருங்கள். 30 நாட்களில் தலை முடி நீளமாக வளர ஆரம்பிக்கும். கூந்தலுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil