Homemade Cracked Heel Cream in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது பாதத்தில் உள்ள வெடிப்புதான். அதனை போக்க நீங்களும் பல வழிமுறைகளை கையாண்டிருப்பீர்கள் அவைகள் அனைத்தும் நல்ல பலனை அளித்ததா என்றால் சிலரின் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள சில டிப்ஸ்களை மட்டும் ஒருமுறை ட்ரை செய்துபாருங்க நல்ல பலனை அளிக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Homemade Foot Cream for Cracked Heels in Tamil:
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது பாதத்தில் உள்ள வெடிப்புதான். அதனை போக்க சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.
டிப்ஸ் – 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மெழுகுவர்த்தி – 2
- கடுகு எண்ணெய் (Mustered Oil) – 4 டீஸ்பூன்
- வாஸ்லைன் (Vaseline) – 2 டீஸ்பூன்
- கிளிசரின் (Glycerine) – 2 டீஸ்பூன்
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 மெழுகுவர்த்திகளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள மெழுகுவர்த்தியை சேர்த்து நன்கு உருக்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள் 👉👉 பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
ஸ்டேப் – 2
அது நன்கு உருகிய பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 4 டீஸ்பூன் கடுகு எண்ணெய் (Mustered Oil), 2 டீஸ்பூன் வாஸ்லைன்(Vaseline) மற்றும் 2 டீஸ்பூன் கிளிசரின் (Glycerine) ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அதனை ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் ஊற்றி ஒரு 10 நிமிடம் கழித்து பார்த்தீர்கள் என்றால் அது நன்கு கெட்டியாக பசைபோல் இருக்கும். பின்னர் அதனை சிறிதளவு எடுத்து உங்களின் பாதத்தில் எங்கெல்லாம் வெடிப்புகள் உள்ளதோ அங்கெல்லாம் தடவிகொள்ளுங்கள்.
இதனை ஒருநாள் இரவு முழுவதும் வைத்து அடுத்த நாள் உங்களின் பாதங்களை பார்த்தால் அதில் இருந்த வெடிப்புகள் அனைத்தும் மறைந்து இருக்கும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்
டிப்ஸ் – 2
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
- உப்பு – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கிளாஸ்
- எலுமிச்சை பழம் – 3
- பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
- ஷாம்பு – 2 டீஸ்பூன்
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 2
தண்ணீர் நன்கு கொதித்த பிறகு அதில் 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் அதனுடன் 3 எலுமிச்சை பழங்களையும் இரண்டு பாதியாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள் 👉👉 பாதங்களில் இருக்கும் வெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க
ஸ்டேப் – 4
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் நாம் கொதிக்க வைத்துள்ள தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டீஸ்பூன் ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்களின் கால்களை அதனுள் வைத்து உங்கள் பாதங்களை Scrub-ரை வைத்து நன்கு தேய்த்துக்கொள்ளுங்கள்.
இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகள் அனைத்தும் மறைந்துவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |