கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்..!

Advertisement

Best Homemade Face pack to Remove Dark Spots in Tamil

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அழகிற்கு எதிராக அவர்கள் முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை இருக்கும். இவற்றை போக்குவதற்க்கு கடைகளில் விற்கும் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். இந்த கிரீம்களை போட்டு  கரும்புள்ளிகள் மறைந்தாலும் நாளடைவில் அது மீண்டும் வந்து விடுகிறது. ஆனால்  இயற்கையாகவே முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க முடியும். அதுவும் 5 நாட்களிலேயே நீக்க முடியும். எனவே இயற்கையாகவே முகத்திலுள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Homemade Face Pack For Dark Spots in Tamil:

பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் 5
  2. வேப்பிலை- சிறிதளவு 
  3. கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன் 
  4. கடலை மாவு- 2 ஸ்பூன் 
  5. கஸ்தூரி மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்

How To Make Face Pack At Home in Tamil:

 how to make face pack at home in tamil

முதலில் சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். அதனுடன் கொழுந்து வேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் அதனுடன் கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து  அரைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆயில் சருமம் உள்ளவர்கள் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

 natural face pack for dark spots in tamil

முடியின் வளர்ச்சிக்கும், நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கும் தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு கலந்து தேய்த்தால் போதும்

 

அப்ளை செய்யும் முறை:

இதை நீங்கள் தினமும் தயார் செய்ய தேவையில்லை. இந்த பேஸ் பேக்கை நீங்கள் ஐஸ் ட்ரேவில் ஊற்றி வைத்து உங்களுக்கு தேவையான போது குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சிறிது நேரம் வைத்தீர்கள் என்றால் பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.

பிறகு அதை எடுத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறைந்து விடும்.

இதை நீங்கள் முகத்திற்கு மட்டுமில்லாமல் கை,கழுத்து மற்றும் கால்களிலும் போட்டு குளிக்கலாம். 

இதை நீங்கள் தினமும் குளிக்கும் போது பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு விரைவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பள்ளங்கள் மற்றும் தழும்புகள் போன்றவை மறைந்து முகம் அழகாக இருக்கும்.

முகத்தில் போகவே போகாதுனு இருந்த பருக்கள் உடனே போக இதை ட்ரை பண்ணுங்க…!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement