How to Remove Black Spots from Face in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தான். நீங்களும் அதனை போக்குவதற்காக இயற்கையாகவும், செயற்கையாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்ததா..? நம்மில் பலரின் பதிலும் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி கொள்ளலாம் என்பதற்கான சில குறிப்பை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Black Spots from Face at Home in Tamil:
உங்களின் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி கொள்ளலாம் என்பதற்கான சில குறிப்பை பற்றி தான் விரிவாக பார்க்கலாம்.
அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.
- பப்பாளி – 1/2 பழம்
- வெள்ளரிக்காய் – 1/2
- உருளைக்கிழங்கு – 1
- மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
- பால் – 4 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
பப்பாளியை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1/2 பழம் பப்பாளியை தோலினை நீக்கிவிட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் போக்க இதை மட்டும் செய்யுங்க
வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளவும்:
அதே போல் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 வெள்ளரிக்காயை தோலினை நீக்கி விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உள்ள சாற்றினை மட்டும் நாம் பப்பாளி சாற்றினை வடிகட்டி வைத்துள்ள கிண்ணத்திலேயே வடிகட்டி கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கினை எடுத்து கொள்ளவும்:
நாம் எடுத்து வைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை எடுத்து அதனின் தோலினை நீக்கி விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உள்ள சாற்றினை மட்டும் கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பாலினை சேர்த்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 டீஸ்பூன் பாலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரில் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளி ஒரே வாரத்தில் மறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் முகத்தில் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |