தலையில் கை வைச்சாலே முடி கொட்டுதா…! அப்போ இனிமேல் இதை Follow பண்ணுங்க..!

Advertisement

முடி உதிர்வதை தடுக்க என்ன செய்வது

பொதுவாக சிலருக்கு தலையில் கை வைத்த உடனே முடி கொட்டுகிறது என்பது தான் பிரச்சனையாக இருக்கிறது. இந்த முடி கொட்டும் பிரச்சனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் இருக்கிறது. இத்தகைய  பிரச்சனையை எப்படி தான் சரி செய்வது என்று பலரும் புலம்புவார்கள். நீங்களும் எப்படியாவது நம்முடைய தலையில் முடி கொட்டுவதை நிறுத்தி அடர்த்தியாக முடியை எப்படியாவது வளர செய்ய வேண்டும் என்றும் முயற்சி செய்து கொண்டு இருப்பீர்கள். அந்த முயற்சி அனைத்தும் உங்களுக்கு முழுமையான பலனை அளித்திருக்குமா என்று தெரியவில்லை. அதனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள இந்த ஹேர் பேக்கை ஒரு முறை நீங்கள் ட்ரை செய்தால் போதும் அதற்கான முழு பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்⇒ முகம் பளபளப்பாக இந்த Simple Face பேக்கை ஒரு முறை முகத்திற்கு ட்ரை பண்ணுங்க ..!

How to Stop Hair Loss Naturally in Tamil:

முடி உதிர்வை உடனடியாக நிறுத்துவது எப்படி

முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்வதற்கு கொய்யா இலை ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • கொய்யா இலை- 1கைப்பிடி அளவு
  • முட்டை- 1
  • வெந்தயம்- 3 ஸ்பூன் 

முடி உதிர்வை உடனடியாக நிறுத்துவது எப்படி..?

ஸ்டேப்- 1

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள கொய்யா இலையை சுத்தமான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். கொய்யா இலையில் வைட்டமின் C, ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி மைக்ரோபியல் நிறையவே இருக்கிறது. அதனால் இது முடி உதிர்வை நிறுத்துவதற்கு நல்ல பயன் அளிக்கிறது.

ஸ்டேப்- 2

அடுத்து 3 ஸ்பூன் வெந்தயம் எடுத்துக்கொண்டு அதை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்துள்ள 3 ஸ்பூன் வெந்தயம் மற்றும் கொய்யா இலையை போட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

நீங்கள் அரைத்து வைத்துள்ள கொய்யா இலை பேஸ்டை ஒரு காட்டன் துணியில் ஊற்றி உங்களுடைய கைகளால் பிழிந்து அதிலிருந்து சாறு எடுத்து கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5 

கடைசியாக தயார் செய்து வைத்துள்ள கொய்யா இலை பேஸ்டுடன் 1 முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளங்கள். முட்டையை நாம் முடிக்கு பயன்படுத்தும் போது அதில் இருக்கும் புரோட்டீன் நமது முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை நன்றாக அதிகரிக்க செய்யும். 

உங்களுடைய முடிக்கு ஹேர் பேக் தயாராகிவிட்டது.

அப்ளை செய்யும் முறை:

how to stop hair loss in tamil

ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை பொறுமையாக அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

20 நிமிடம் கழித்த பிறகு வழக்கம் போல தலைக்கு ஷாம்பு அப்ளை செய்து குளித்து விடுங்கள். இதுமாதிரி செய்தால் இனி முடி கொட்டும் பிரச்சனையே இருக்காது. 

உங்களுக்கு அதிகமாக முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் வாரத்திற்கு 2- முறையும், குறைவாக முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள். 

இதையும் படியுங்கள்⇒ பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலே Gold Facial செய்துகொள்ள முடியும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement