கருவேப்பிலை கூந்தல் எண்ணெய் தயாரிக்கும் முறை | Karuveppilai Hair Oil in Tamil
Karuveppilai Hair Oil in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய அழகு குறிப்பு பதிவில் ஒரு அருமையான டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது முடி உதிர்வை தடுத்து. முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய ஒரு அருமையான கூந்தல் எண்ணெய் தயாரிப்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கூந்தல் எண்ணெய் தயார் செய்வதற்கு இரண்டே பொருட்கள் மட்டும் போதும். குறிப்பாக 15 நாட்களியே உங்களுக்கு 100% நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அந்த கூந்தல் எண்ணெய் எப்படி தயார் செய்ய வேண்டும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்த்துவிடலாம்.
கூந்தல் என்னை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- கருவேப்பிலை – 3 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய் – 400 கிராம்
- இரும்பு வாணலி – 1
கூந்தல் எண்ணெய் செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நமக்கு கொர கொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
வெந்தயம் நமக்கு கொர கொரப்பாக அரைத்ததும் அதிலேயே மூன்று கைப்பிடியளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 400 மில்லி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும். எண்ணெய் மிதமாக சூடானதும் அரைத்துவைத்துள்ள கலவையை இவற்றில் சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள்.
இவ்வாறு 15 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த எண்ணெய்யை காய்ச்ச வேண்டும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை நன்றாக ஆறவிடவும், நன்கு ஆறியது வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி உபயோகிக்கலாம்.
உபயோகிக்கும் முறை:
இந்த எண்ணெயை இரவு உறங்க செல்வதற்கு முன் தலையில் நன்றாக அப்ளை செய்து கொஞ்சம் மசாஜ் கொடுத்து ஜடையை பின்னிக்கொள்ளுங்கள்.
பிறகு மறுநாள் காலை எழுத்து தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம் இல்லை. இதனை தினமும் கூந்தல் எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம். தினமும் தலைக்கு பயன்படுத்தும்போது அதிகளவு பயன்படுத்திவிட வேண்டாம், கொஞ்சமாக பயன்படுத்துங்கள் ஏன் என்றால் இந்த எண்ணெயில் வெந்தயம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் குளிர்ச்சிக்கு இருக்கும் ஆக கொஞ்சமாக பயன்படுத்தி வரலாம்.
மேலும் சைனஸ், காய்ச்சல், தலைவலி, காது அடைப்பு, சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்த்தால் முதுமையில் கூட முடி கருப்பாக இருக்கும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |