கேரளா பெண்களின் அழகின் ரகசியம் இந்த பவுடர் தானா..!

Advertisement

Kerala Beauty Secrets For Fair Skin in Tamil

இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கேரளத்து பெண்களின் அழகு ரகசியம் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் கேரளத்து பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.? என்ற  கேள்வி எல்லோருக்கும் இருக்கும். கேரளா பெண்கள் தங்களை அழகுபடுத்த எந்த விதமான செயற்கை பொருட்களையும் பயன்படுத்த மாட்டார்களாம். அவர்கள் இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே பவுடர் செய்து அதைத்தான் முகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். வாருங்கள் அவர்கள் அழகின் ரகசிய பவுடர் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள பெண்களின் அழகிற்கு முகப்பொடி:

முகப்பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  1. பச்சை பயிறு- 100 கிராம் 
  2. முட்டை- 2 (முட்டையின் வெள்ளைக்கரு)

முகப்பொடி தயாரிக்கும் முறை:

 

முதலில் பச்சை பயிரை நன்றாக காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய அகலமான தட்டில் போட்டு கிளறி விடுங்கள்.

பிறகு அதில் இரண்டு முட்டைகளை எடுத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

 கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன

இவற்றை நன்றாக கலந்து தட்டு முழுவதும் பரப்பி வெயிலில் காயவைக்க வேண்டும்.

கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

காயவைக்கும் போது ஒரு கரண்டியை வைத்து நன்றாக கிளறி விட்டு காயவைக்க வேண்டும். இரண்டு நாட்கள் வரை வெயிலில் காயவைத்து பவுடர் செய்யும் பதத்திற்கு வந்ததும் அதை எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள். 

 கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன

இந்த பவுடரை காற்று புகாதவாறு ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்து நீங்கள் குளிக்கும்போது எடுத்து பயன்படுத்தலாம்.

முகத்திற்கு அப்ளை செய்யும் முறை:

Kerala Beauty Secrets For Fair Skin in Tamil

இந்த பவுடரை நீங்கள் குளிக்கும் போது முகத்திற்கு தேய்த்து குளிக்கலாம். இதை  முகத்திற்கு போட்டுவிட்டு சோப்பு போடக்கூடாது.

முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் வெள்ளையாக மாற இதை ட்ரை பண்ணுங்க..!

அப்படி இல்லையென்றால் சோப்பு போட்டு குளித்தப்பிறகு இதை முகத்திற்கு போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து பிறகு தண்ணீரை மட்டும் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

இந்த பவுடரை முகத்திற்கு மட்டும் அல்ல உடம்பிற்கும் தேய்த்து கொள்ளலாம்.

இந்த பவுடரை நீங்கள் தேய்த்து குளிப்பதன் மூலம் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும். உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பொலிவாக இருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு நீங்களும் வந்துவிடுவீர்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement