முடி வளர்ச்சி அதிகரிக்க
ஹெலோ மக்களே முகம் தெரியாத என்னுடைய நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவை படிக்க சுவாரசியமாக இல்லையென்றாலும் உங்கள் பிரச்சனையை என்னுடைய பிரச்சனையாக கொண்டு இந்த தீர்வு கிடைக்க போகிறது. பதிவை படிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..! அதிகம் இந்த பிரச்சனை பெண்கள் மட்டுமே வருகிறது. அவர்களின் அழகிற்கு முக்கிய பங்கு வகுக்கிறது தலை முடி தான். ஆனால் இப்போது உணவுகளில் சரியான கவனம் இல்லாததால் உடளுக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் முடி உதிர்வு அதிகமாகி முடி கொட்டுகிறது. சரி வாங்க ஈசியாக முடி உதிர்வை தடுக்க என்ன வழி என்று தெரிந்துகொள்வோம்.
முடி வளர்ச்சி அதிகரிக்க:
முதலில் பெண்கள் அடிக்கடி தலை குளிப்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு சளி காய்ச்சல் ஏற்பட்டு தலை பாரம் கொண்டு முடி உதிர்வதை அதிகமாக்குகிறது. முன்பு தலை குளிச்சால் சாம்பிராணி புகை போட்டு தலைக்கு காட்டி காயவைத்து பழக்கம் அதனை இப்போது செய்யும் போது அதில் பூண்டு தோலை போட்டு கருகிய பின் தலைக்கு காட்டுவது நல்லது இதன் மூலம் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
முடி வெடிப்பு சரியாக:
சிலருக்கு முடி நீளமாக இருக்கும் அதேபோல் முடியின் நுனியில் வெடிப்பு ஏற்பட்டு மிகவும் அசிங்கமாக இருக்கும். அது நாளடைவில் முடி உதிர்வை ஏற்படுத்தும் இதற்கு தீர்வு தருவதற்கு இதை ட்ரை பண்ணுங்க ஒரூ முட்டை, வாழைப்பழம் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் போதும்.
இப்போது ஒரு மிக்சி ஜாரில் வாழைப்பழத்தை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன் பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துகொள்ளவும். கடைசியாக அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் முழுவதும் தடவிக்கொள்ளவும். அரை மணி நேரம் காயவைத்து குளித்துவிடுங்கள். இதனை தொடர்ந்து இரண்டு மாதம் செய்து பாருங்கள் அனைத்து முடியும் ஒரே மாதிரியாக உடையாமல் இருக்கும்.
முடி வேர் உறுதியாக:
சத்து குறைபாடுகள் காரணமாக தலைமுடி வேர் வலுவிழந்து முடியின் வலிமை குறைந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு செம்பருத்தியை விட நல்ல மருந்து எங்கு கிடைக்குமென்று தெரியவில்லை இதை முதலில் ட்ரை பண்ணிபாருங்கள். ஒரு கைநிறைய செம்பருத்தி, அதேபோல் இலைகளும் எடுத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு கிண்ணத்தில் இரண்டையும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கையாலோ அல்லது மிக்சியிலோ போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். நன்கு அரைந்துவிட்டால் அதனை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் ஒரு துணியில் போட்டு வடிகட்டி அதன் பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். இப்படி செய்வதால் முடியின் வேர் வலுப்பெற்று உதிர்வை குறைக்கும்.
முடி அடர்த்தியாக வளர:
முடி அதிகமாக வளர இதை ட்ரை பண்ணுங்க, ஒரு கப் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும். இதனை நன்கு அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசிக்கொள்ளவும். இப்படி செய்தால் உடலில் உள்ள சூட்டை குறைத்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
டிப்ஸ்- 2
1 கைப்பிடி செம்பருத்தி பூ, ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள், ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி இலை, ஒரு கைப்பிடி மருதாணி இலை, ஒரு கைப்பிடி கருவேப்பிலை போன்ற பொருட்களை போட்டு அதனை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு கப் கற்றாழை ஜெல் சேர்த்து இதையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்பு 1/2 லிட்டர் அல்லது 1 லீட்டர் தேங்காய் எண்ணெய்யை கடாயில் போட்டு காய்ச்ச வேண்டும் பின்பு அரைத்துவைத்த பொருட்களை போட்டு கொதிக்கவிடவும். கொதித்தவுடன் அடுப்பை அணைத்து அதில் நன்கு ஊறவிடவும். பின்பு வடிகட்டி தினமும் தலையில் தேய்த்துக்கொள்ளவும்.
வாரத்திற்கு 1 முறை இரவு தூங்கும் போது தடவினால் போதும் முடி நீளமாக கருமையாக வளரும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |