ஒரு பொருள் போதும் உங்கள் வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடியை கருமை ஆக்கிடும்

Narai Mudi Karupaga Oil 

நரை முடி கருப்பாக மாற எண்ணெய் | Narai Mudi Karupaga Oil 

Narai Mudi Karupaga Oil  – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான மற்றும் சுலபமான அழகு குறிப்பு டிப்ஸை பற்றி தான். அதாவது இன்றைக்கு பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் நரைமுடி. இந்த பிரச்சனை முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் இருந்து வந்தது.. ஆனால் இப்பொழுது இளம்வயதினர்களுக்கும் ஏற்படுகிறது. இதனை இயற்கையான முறையில் சரி செய்ய இங்கு ஒரு அருமையான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஒரு முறை மட்டும் ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 50 ml
  2. நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்

முடி கருமையாக வளர எண்ணெய் செய்முறை விளக்கம் – Narai Mudi Karupaga Tips:

ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள் அதனை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.

பின் வாணலி சூடானதும் 50 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்துங்கள்.

எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

பிறகு 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை நன்கு ஆறவைக்கவும்.

பின் ஒரு சுத்தமான பவுலில் மாற்றி கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தலை முடி முழுவது நன்கு அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து மையிலேடு ஷாம்பை பயன்படுத்தி தலை குளிக்கவும்.

இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை என்று இரண்டு வாரங்களுக்கு மட்டும் ட்ரை செய்தால் போதும் நரை முடி மற்றும் செம்பட்டை முடி போன்றவை கருமையாக மாறிவிடும்.

தலை முடியும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
6 பொருள் போதும் ஒரே வாரத்தில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! இயற்கை ஹேர் டை..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil