Natural Remedies For Smooth And Glowing Face in Tamil
அனைவருக்குமே முகம் வெண்மையாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில மாசுபாடு காரணங்களால் முகத்தில் அழுக்குகள் சேர்த்து சரும பிரச்சனை உண்டாக்குகிறது. இதனால் கரும்புள்ளிகள், பருக்கள், கருமை போன்றவை ஏற்பட்டு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைத்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே முகத்தை வெண்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க நினைக்கும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
முகம் பளபளப்பாக என்ன செய்ய வேண்டும்..?
பப்பாளி பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- பப்பாளி- 1
- தேன்- 1 ஸ்பூன்
நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க 2 சொட்டு தடவினால் போதும்.. |
பப்பாளி பேஸ் பேக் செய்யும் முறை:
முதலில் பப்பாளியை நன்றாக கழுவி விட்டு அதன் தோலை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கிண்ணத்தில் 1 கப் அளவிற்கு பப்பாளி துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள்.
இதனை பேஸ்ட் பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
பின்னர், வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவுங்கள்.
தயிர் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- தயிர்- 2 ஸ்பூன்
- தேன்– 1 ஸ்பூன்
கருமையாக உள்ள உங்களின் உதடுகளை 1 மணி நேரத்தில் கோவைப்பழம் போல சிவப்பாக மாற்ற அரிசி மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..! |
தயிர் பேஸ் பேக் செய்யும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரினை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு முகத்தை குளிர்ந்த தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |