How to make Lips Pink Naturally in Tamil
நமது முகத்தின் மிகவும் மென்மையான மற்றும் அழகான பகுதி என்றால் அது நமது உதடுகள் தான். அப்படி நமது முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் உதடுகள் நம்மில் சிலருக்கு கருமையாக இருக்கும். அதனை மறைப்பதற்காக நாமும் பல வேதிப்பொருட்களை கலந்த லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இவ்வாறு வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்துவதால் நமது உதடுகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உதடுகளை எவ்வாறு நன்கு சிவப்பாக மாற்றுவது என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் உதடுகளை நிரந்தரமாக சிவப்பாக மாற்றி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to make Your Lips Pink Naturally Permanently in Tamil:
இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உதடுகளை எவ்வாறு நன்கு சிவப்பாக மாற்றுவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் அறிந்து கொள்வோம்.
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
- கிளிசரின் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Lip Stick பயன்படுத்தாமல் உங்களின் உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக மாற வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
தேனை சேர்க்கவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேனையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் தூளினை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூளினையும் கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்களின் உதடுகளில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு நன்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி உங்களின் உதடுகளை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் உதடுங்கள் நன்கு கோவைப்பழம் போல சிவப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> கருமையாக உள்ள உதடுகள் இரண்டு வாரத்தில் சிவப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |