Hair Pack For Hair Growth And Thickness in Tamil
பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால் தான் அழகு என்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் சத்து குறைபாடு, மாசு போன்ற பல காரணத்தால் தலைமுடி உதிர்ந்து விடுகிறது. அதுவும் கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தினால் தலைமுடியின் வேர்க்கால்கள் பாதிப்படைந்து முடி அதிகமாகவே உதிர்கிறது. எனவே இந்நிலையில் முடியை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் முடியை 6 மாதத்தில் 2 மடங்கு அதிகமாக வளர்க்க இப்பதிவில் இயற்கையான ஹேர் பேக் ஒன்றினை பதிவிட்டுள்ளோம். எனவே முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரவைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Natural Hair Pack For Hair Growth in Tamil:
ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் பொடி- முடிக்கு தேவையான அளவு
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி
- முட்டையின் வெள்ளைக்கரு- 1 முட்டையில் உள்ளது
நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இவை இரண்டுமே முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் முட்டையில் புரோட்டீன் அதிகமாகவே உள்ளது. இதனை நாம் முடிக்கு பயன்படுத்தும் போது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி முடியை அடர்த்தியாக வளர செய்யும்.
ஹேர் பேக் செய்யும் முறை:
ஸ்டேப் -1
முதலில் செம்பருத்தி இலைகளை நன்றாக கழுவி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, அரைத்த செம்பருத்தி பேஸ்டினை ஒரு காட்டன் துணி அல்லது வடிகட்டியை பயன்படுத்தி செம்பருத்தி இலையின் சாற்றினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு நெல்லிக்காய் பவுடர் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் செம்பருத்தி சாற்றினை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -4
அதன் பின், இதில் முட்டையின் வெள்ளைக்கருவினை சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது இயற்கையான ஹேர் பேக் தயார்.!
எப்படீங்க இவ்ளோ முடிய வளர்த்தீங்கன்னு மத்தவங்க கேட்குற அளவுக்கு முடி வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்..! |
அப்ளை செய்யும் முறை:
முதல் நாளே தலையில் எண்ணெய் வைத்து ஊறவைத்து விடுங்கள்.
இப்போது, தலைமுடியை வாகு எடுத்து இருபுறமாக பிரித்து சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை எடுத்து ஒருபுறம் உள்ள முடியில் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதேபோல், மறுபுறமும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு, தண்ணீர் மட்டும் பயன்படுத்தி முடியை நன்றாக அலசிய பிறகு ஷாம்பு போட்டு அலசி கொள்ளுங்கள்.
இந்த ஹேர் பேக்கினை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் 6 மாதத்தில் 2 மடங்கு முடி அடர்த்தியாக வளருவதை பார்க்கலாம்.
ஒரு முட்டை மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்.. |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |