உங்க முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நீக்கி முகம் நன்கு பொலிவு பெற பால் மட்டும் போதும்..!

Advertisement

Natural Hair Removal for Face in Tamil

பொதுவாக அனைவருக்குமே தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உங்களின் இந்த ஆசைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு சிலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருக்கும். அதனை போக்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் செயற்கையான கிரீம் மற்றும் வாக்ஸ் ஆகியவை உங்களுக்கு நல்ல பலனை அளிப்பதில்லை மேலும் உங்களுக்கு மிகுந்த வலிகளையும் ஏற்படுத்தும்.

இதம்தனை இயற்கையான முறையில் கையாண்டால் நிரந்தர தீர்வினை தரும். அதனால் இந்த பதிவை முழுமையாக படுத்து பாருங்க. அப்போ தான் என்ன பேக், எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற முழு விவரத்தையும் அறிந்து கோல் முடியும்.

How to Remove Hair from Face Permanently in Tamil:

How to Remove Hair from Face Permanently in Tamil

உங்களின் முகத்தில் உள்ள முடிகளை இயற்கையான முறையில் எவ்வாறு போக்குவது என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பால் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  4. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
  5. காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  6. கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  7. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  8. வைட்டமின் E கேப்சூல் – 2 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க போதும்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பால், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

காபித்தூளை கலந்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் காபித்தூளை கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2 நாட்களில் மரு நீங்க வெங்காயம் மட்டும் போதும்

கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லினை கலக்கவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வைட்டமின் E கேப்சூலை சேர்க்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள முடிகள் நிரந்தரமாக நீங்கி விடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கோடைகாலத்தில் உங்க முகம் கருமையாக காட்சியளிக்கிறதா அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement