Oil For Grey Hair Home Remedy
நரை முடி என்பது ஆரம்பகாலத்தில் எல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சாதாரணமாக வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் சிலருக்கு ஆரம்பத்தில் ஒன்று ஒன்றாக இருந்தாலும் நாளடைவில் நிறைய நரை முடிகள் வந்து விடுகிறது. இத்தகைய நரை முடி பிரச்சனைக்கு என்ன தான் செய்வது என்று நிறைய நபர்களுக்கு கேள்விகள் தோன்றி இருக்கலாம். இந்த கேள்விகள் அனைத்திற்கும் இன்றைய பதிவின் மூலமாக பதில் தெரிந்துக்கொள்ளலாம். அதாவது நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
நரை முடி வரக்காரணம்:
நரை முடி வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அத்தகைய காரணங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மெலனின் குறைபாடும் அடங்குகிறது. நம்முடைய உடலில் ஊட்டசத்து குறைபாடு இருந்தாலோ அல்லது தலை முடி நீளத்திற்கு ஏற்றவாறு மெலனின் நிறத்தினை முழுமையாக கொடுக்க முடியவில்லை என்றாலும் தலையில் நரை முடி வருகிறது. இதுவே தலையில் நரை முடி வருவதற்கான காரணம் ஆகும்.
நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 100 மில்லி
நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து கொள்ளுங்கள்.
எப்போ பார்த்தாலும் முடி கொட்டுதா.. அப்படினா இதை ட்ரை பண்ணுங்க முடி உதிர்வே இருக்காது..
எண்ணெய் தயாரிக்கும் முறை:
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், நரை முடியினை கருப்பாக மாற்றவும் உதவுகிறது. அதனால் 1 கைப்பிடி கறிவேப்பிலை எடுத்துக்கொண்டு சுத்தம் செய்து வைத்து விடுங்கள்.
அதே போல் கருஞ்சீரகத்திலும் நரை முடியை கருப்பாக மாற்றும் தன்மை இருப்பதால் 3 ஸ்பூன் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயினை வைத்து எடுத்துவைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து 2 நிமிடம் வறுத்து பின்பு ஆற வைத்து மிக்சி ஜாரில் பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயினை ஊற்றி தேங்காய் எண்ணெயை கொதிக்க விடுங்கள்.
அதன் பிறகு எண்ணெய் கொதித்ததும் அதனுடன் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் கருஞ்சீரக பொடி மற்றும் 1 ஸ்பூன் வெந்தயம் இவற்றை சேர்த்து நன்றாக எண்ணெயினை 10 முதல் 15 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்த பிறகு எண்ணெயினை இறக்கி ஆற வைத்து விடுங்கள். அவ்வளவு தான் தலையில் உள்ள வெள்ளை முடியினை கருப்பாக மாற்ற கூடிய எண்ணெய் தயார்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை:
இப்போது தயார் செய்து வைத்துள்ள இந்த எண்ணெயினை தினமும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தேய்த்து வந்தால் போதும் விரைவில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.
முடி உதிராமல் இருக்க இந்த ஹேர் பேக் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |