பாத அழகு குறிப்புகள்
பாதத்தை அழகு படுத்துவதில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக Beauty Parlour சென்று அதிகம் பணம் செலவு செய்கின்றனர். நீங்கள் இப்படி செலவு செய்வது முழுமையான பலன்களை தராது. அதனால் நீங்கள் ஆரம்பித்திலுருந்து வீட்டில் இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை வைத்து உங்களின் கால்களை அழகு படுத்தலாம். வீட்டில் இருந்தபடியே உங்களின் பாதங்களை அழகுபடுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ அழகான மற்றும் நீளமான நகம் வேண்டுமென்றால் இப்படி பண்ணுங்க
கால் பாதம் அழகு பெற:
ஸ்டேப்:1
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்களது கால் பாதம் முழுகும் வரை வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின் அந்த தண்ணீரில் சமையல் சோடா 2 தேக்கரண்டி, உப்பு 2 தேக்கரண்டி, ஷாம்பு 2 தேக்கரண்டி, எலும்பிச்சை பழ சாறு சிறிதளவு போன்றவை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலந்த தண்ணீரில் உங்களது பாதத்தை வைக்கவும். பின் 15 நிமிடம் கழித்து உங்களது பாதத்தை தண்ணீரிலுருந்து எடுத்து துடைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:2
பின் ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா 2 தேக்கரண்டி, எலும்பிச்சை பழச்சாறு 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு பேஸ்ட்டாக வரும் வரை கலக்கவும்.
பிறகு உங்களது பாதத்தை எலும்பிச்சை பழ தோலை பயன்படுத்தி கலந்து வைத்த பேஸ்ட்டை தொட்டு தேயுங்கள். இப்படி தேய்ப்பதால் பாதத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். எலும்பிச்சை தோல் அல்லது பிரஸ் பயன்படுத்தியும் தேய்க்கலாம்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் உங்களது பாதங்களை வைத்திருங்கள். பின் ஒரு துணி பயன்படுத்தி ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்:3
அடுத்து ஒரு சின்ன பாத்திரத்தில் அரிசி மாவு 1 தேக்கரண்டி, எலும்பிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களது பாதத்தை சுற்றி அப்ளை செய்யுங்கள். பின் 10 நிமிடம் கழித்து பாதங்களை கழுவி விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதங்களை ஒரு 5 நிமிடம் வைத்திடுங்கள். பிறகு ஒரு துணியால் பாதங்களை ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களது நகங்களை அழகுபடுத்துவதற்கு உங்களுக்கு பிடித்த நெயில் பாலிஷை போட்டு கொள்ளுங்கள். உங்களது பாதங்களை ஈசியாக வீட்டில் இருந்தபடியே அழகாக்கி கொள்ள சூப்பர் ஐடியாவா இருக்கா.! அதுவும் செலவே இல்லாமல் சுலபமாக செய்திடலாம். இந்த பதிவை படிப்பதோடு நிறுத்தி விடாமல் பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |