ஏழு நாட்களில் தலையில் இருக்கும் பேன், ஈறு போக டிப்ஸ்

pen thollai poga tips in tamil

தலையில் பேன் தொல்லை

பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. தலையில் பேன் தொல்லை இருந்தால் எங்கு சென்றாலும் தலையை சொரிந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். தலையில் பேன் இருந்தால் கை எப்பொழுதும் தலையில் தான் இருக்கும். எல்லா நேரமும் தலையிலே கை இருந்தால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள். வீட்டில் ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் மற்றவருக்கும் பரவி விடும். ஈறு பிரச்சனை இருந்தால் தலையை எப்படி சீவினாலும் அசிங்கமாக இருக்கும். இது பார்ப்பவர்களை அருவருப்பு அடைய செய்யும். இந்த பிரச்சனைக்கான தீர்வை காண்போம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு வர காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது சூப்பர் ஐடியா.!

வேப்பிலை பேன்:

வேப்பிலை பேன்

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த வேப்பிலையை வடிகட்டியில் வைத்து வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.

அரைத்த சாற்றை தலையில் தடவுங்கள். இந்த சாற்றை தடவி 20 நிமிடம் வைத்திருங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளித்து விடலாம்.

துளசி இலை:

துளசி இலை

துளசி இலையை எடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த துளசியை தலையில் தேய்த்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரில் அலசி விடுங்கள்.

தேங்காய்:

 pen thollai poga tips in tamil

தேங்காய் சிறிதளவு எடுத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் 10 மிளகையும் சேர்த்து அரைக்கவும். அரைத்த பிறகு வடிகட்டியில் வடித்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.

இந்த சாற்றை தலையில் தேய்த்து கொள்ளவும். ஒரு 20 நிமிடம் அப்படியே தலையில் ஊறட்டும். அதன் பிறகு தலையை அலசி விடுங்கள்.

வேப்பிலை மற்றும் துளசி:

வேப்பிலை பாக்டீரியாக்களை ஒழிக்கும் வல்லமை கொண்டது. துளசி குளுமைத் தன்மை அளித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை தலை முடியின் வேர்களில் படும்படி தேய்த்து வையுங்கள். சிறிது நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை குறைய ஆரம்பிக்கும்.

மருதாணி மற்றும்  வசம்பு:

 பேன் தொல்லைக்கு தீர்வு

மருதாணி இலைகளை மட்டும் எடுத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் வசம்பு தூளையும் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலக்கவும். இதை தலையில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு தலையை அலசி விடுங்கள்.

வாரத்தில் இரு முறை தலை குளித்து விடுங்கள். அப்போது தான் தலையில் அழுக்கு சேராமல் பேன் தொல்லையும் இருக்காது. வாரம் இரு முறை பேன் சீப்பை பயன்படுத்தி தலையை சீவுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு எல்லாம் ஒழிந்துவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!