பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..!

Advertisement

பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும் | Dandruff Treatment at Home in Tamil 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கின்ற பிரச்சனையில் பொடுகு பிரச்சனையும் ஒன்று. இளம் வயதிலே பொடுகு பிரச்சனை வந்து விடுகிறது. இதற்காக கடையில் விற்கும் ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தலையில் அழுக்கு சேர்வது, சரியாக சாப்பிடாமல் இருப்பது உடலிற்கு தேவையான புரோட்டீன் கிடைக்காமல் இருப்பது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பொடுகு பிரச்சனை வருகின்றது.

 பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை தலை குளிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு நாளிற்கு 7 அல்லது 8 மணி நேரம் தூங்க வேண்டும்.  இதை சரியாக செய்து கொண்டே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பொடுகு பிரச்சனையை சரிசெய்ய ஒரு ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • கற்றாழை
  • வெங்காயம்
  • முருங்கைக்கீரை
  • செம்பருத்தி பூ
  • வெந்தயம்
  • செம்பருத்தி இலை

ஹேர் பேக் செய்முறை:

 கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் பொடுகு பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். செம்பருத்தி இலை இளநரை வராமல் தடுக்கும். செம்பருத்தி பூ பொடுகு வராமல் தடுக்கும். வெந்தயம் உடலை குளிர்ச்சியாகவும், முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவுகிறது.  

முதலில் மிக்சி ஜாரில் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய கற்றாழை, முருங்கை கீரை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை ஊற வைத்த வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

 

பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும்

இந்த பேக்கை தலை முடியை ஒவ்வொரு பகுதியாக எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்யவும். பின் தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு தலையை தேய்த்து குளிக்கவும். தலையில் எந்த வித ஷாம்பும் போட தேவையில்லை. ஏனென்றால் இந்த பேக்கில் சேர்த்திருக்கின்ற பொருட்கள் ஷாம்பு போல தேய்த்தால் நுரை வரும்.

இந்த பேக்கை 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்தாலே பொடுகு பிரச்சனையை சரி செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

குறிப்பு:

இந்த பேக்கை சைனஸ் பிரச்சனை, சளி பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இதில் சேர்த்திருக்கின்ற பொருட்கள் அனைத்தும் குளிர்ச்சியானது. அதனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அப்ளை செய்வதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள் ⇒ நிரந்தரமாக நரை முடி மறைய இந்த ஒரு எண்ணெயை மட்டும் தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement