மாதுளை தோல் பயன்கள் – Pomegranate Peel for Hair Fall in Tamil
பழங்களிலேயே மிக அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைய வைட்டமின்களும் நிறைந்த பழங்களில் ஒன்று என்றால் அது மாதுளையைச் சொல்லலாம். அந்த ஊட்டச்சத்துக்கள் அந்த பழங்களில் மட்டுமல்ல. அதனுடைய தோலில் இருக்கிறது. அதனால் இனிமேல் அந்த தோலை கீழே தூக்கி வீசிவிடாதீர்கள். ஏன் அப்படினா இந்த மாதுளை பழ தோலையும் பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.
முடி உதிர்வு நீங்க மாதுளை தோல்:
உங்கள் வீட்டில் இனி எப்பொழுது மாதுளை பழம் வாங்கினாலும். அவற்றில் உள்ள பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு. தோலை வைத்து கீழ் கூறப்பட்டுள்ளது போல் ட்ரை செய்து பாருங்கள் உங்கள் முடி உதிர்வு பிரச்சனை சரி ஆகும். சரி வாங்க மாதுளை தோலை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்னையை சரி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்
செய்முறை:
உங்கள் வீட்டில் எத்தனை மாதுளை பழ தோல்கள் இருக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 மாதுளை பழ தோலை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றுங்கள்.
அரைத்து வைத்திருக்கும் மாதுளை பழ தோல் விழுதை அந்த தண்ணீரில் போட்டு அடுப்பை மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
தண்ணீரின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கும். தோலில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கும்.
பத்து நிமிடங்கள் தண்ணீர் கொதித்தால் போதும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு ஃபில்டரின் மூலம் நன்றாக வடிகட்டி எடுத்தால் மாதுளை பழத்தோல் தண்ணீர் நமக்கு கிடைத்துவிடும். அவ்வளவு தான்.
இதை நன்றாக ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது 7 லிருந்து 10 நாட்கள் வரை கெட்டுப்போகாது.
பயன்படுத்து முறை:
இவ்வாறு தயார் செய்த ஸ்பிரேவை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அடித்து விட்டு உங்களுடைய விரல்களை வைத்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு அப்படியே விட்டுவிடலாம். பிறகு சிறிது நேரம் கழித்து தலை குளித்துவிடங்கள்.
இந்த முறையை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்து வந்திர்கள் என்றால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → அட எலுமிச்சை தோலில் மறைந்துள்ள பயன்கள் பற்றி தெரியுமா?
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |