ஒரே ஒரு பொருள் போதும் அபாரமான முடி வளர்ச்சிக்கு.. வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள்

Advertisement

Rosemary Oil for Hair Growth in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஒரு அருமையான குறிப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனை வர பல காரணங்கள் இருந்தாலும். தலை முடிக்கு சரியான பராமரிப்பு முறையை மேற்கொண்டோம் என்றால் தலை முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். அந்த வகையில் இன்று நாம் தலை முடியை ஆரோக்கியமான முறையில் வளர செய்ய ஒரு அருமையான குறிப்பு ஒன்றை பார்க்கலாம் வாங்க. இந்த குறிப்பை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தோம் என்றால் அபாரமான முடி வளர்ச்சியை நீங்கள் காணமுடியும். சரி வாங்க அது என்ன குறிப்பு என்று இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. ஆலிவ் ஆயில் – 1/4 கப் (60 மில்லி)
  2. ஆமணக்கு எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  3. ரோஸ்மேரி இலை – தேவையான அளவு
  4. விளக்கெண்ணெய் – 10 மில்லி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலைமுடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வெந்தயம், கற்றாழை மட்டும் போதும்..!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஆலிவ் ஆயில் 1/4 கப், விளக்கெண்ணெய் 10 மில்லி மற்றும் ரோஸ்மேரி இலைகள் சிறிதளவு சேர்க்கவும்.

பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் வைத்துள்ள பவுலை அந்த தண்ணீரில் வைத்து 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை சூடுபடுத்தவும். அதாவது டபுள் பாயிலிங் முறையில் எண்ணெயை சுடவைக்க வேண்டும்.

பின் 15 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து அந்த பவுலை எடுத்துவிடவும். இப்பொழுது எண்ணெயை நன்கு ஆறவைக்க வேண்டும். எண்ணெய் ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி அதனுடன் சிறிதளவு பிரஸ் ரோஸ்மேரி இலையை போட்டுமூடி வைத்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.  அவ்வளவு தான் எண்ணெய் தயார் இந்த எண்ணெயை பயன்படுத்தும் முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெய் நீங்கள் வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம். அதாவது இந்த எண்ணெயை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து பின் 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து தலை அலசினால் போதும். இவ்வாறு செய்துவருவதினால் தலை முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே கண்கூட காண்பீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் கை வைச்சாலே முடி கொட்டுதா..! அப்போ இனிமேல் இதை Follow பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement