முகம் அழகு பெற மூன்று வகையான ஃபேஸ் பேக்..! Skin brightening home remedies

முகம் அழகு பெற மூன்று வகையான ஃபேஸ் பேக்..! Skin brightening home remedies..!

Skin brightening home remedies:- பெண்களின் முகம் இயற்கையான முறையில் அழகு பெற மூன்று வகையான அழகு குறிப்புகளை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். வெயில் காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனைகளாக இருக்க கூடியது வறண்ட சருமம், பொலிவிழந்த சருமம், ஆயில் ஃபேஸ், முக கருமை போன்ற பலவகையான சரும பிரச்சனைகள், இது போன்ற சரும பிரச்சனைகள் சரியாக முகம் அழகு பெற மூன்று வகையான ஃபேஸ் பேக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பாலோ செய்து வர முகம் என்றும் மென்மையாகவும், பொலிவுடனும், மிகவும் அழகாகவும் காணப்படும். சரி வாங்க முகம் அழகு பெற மூன்று வகையான ஃபேஸ் பேக்கினை பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

Tomato face pack:-

Tomato face pack

தக்காளி சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை என்றும் இளமையுடன் வைத்து கொள்ளும் தன்மை கொண்டது. எனவே தக்காளியை பயன்படுத்தி செய்ய கூடிய ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:-

 1. கடலை மாவு – ஒரு ஸ்பூன்
 2. கோதுமை மாவு – ஒரு ஸ்பூன்
 3. எலுமிச்சை சாறு – மூன்று துளிகள்
 4. தக்காளி பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்
 5. காய்ச்சாத பால் – 2 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் கோதுமை மாவு, எலுமிச்சை சாறு மூன்று துளிகள், பால் இரண்டு ஸ்பூன் மற்றும் தக்காளி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கினை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சரும வறட்சி நீங்கும், குறிப்பாக முகத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

Turmeric face pack:-

Turmeric face pack

மஞ்சள் சரும அழகை அதிகரிக்க ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இந்த மஞ்சளை பயன்படுத்தி செய்ய கூடிய ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:-

 1. கடலை மாவு – 2 ஸ்பூன்
 2. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
 3. தேன் – 1 ஸ்பூன்
 4. தயிர் – 2 ஸ்பூன்
 5. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் 2 அல்லது 3 முறை பின் பற்றி வர சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி சருமம் பளபளப்பாக காணப்படும்.

Coffee face pack:-

coffee face pack

coffee face pack சருமத்திற்கு ஒரு சிறந்த புத்துணர்ச்சியை அளிக்கும், சரி coffee face pack-ஐ தயார் செய்து சருமத்திற்கு எப்படி அப்ளை செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

 1. காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்
 2. கடலை மாவு – ஒரு ஸ்பூன்
 3. தயிர் – 2 அல்லது 3 ஸ்பூன்
 4. எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

செய்முறை:-

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 2 ஸ்பூன் காபி பவுடர், 1 ஸ்பூன் கடலை மாவு, 2 அல்லது 3 ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும், பின் 20 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் என்றும் பளபளப்பாக இருக்கும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami