வெயில் கால டிப்ஸ் | Summer Season Skin Care Tips in Tamil
வெயில் காலம் வந்துவிட்டாலே முதலில் பாதிப்படைவது நம்முடைய சருமம். வெயிலில் அலைந்து வேலை பார்ப்பதால் சருமம் அதிக கருமைக்குள்ளாகும். சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்து கரும்புள்ளியாக மாறிவிடும், அதிக வெயிலின் தாக்கத்தால் ராஷஸ், அரிப்பு, சரும தோல் சிவந்து போதல் இது மாதிரியான பல சரும பிரச்சனைகள் வெயில் காலத்தில் ஏற்படுவது வழக்கமாக இருக்கும். இதற்கு நாம் கடைகளில் விற்கக்கூடிய பல க்ரீம்களை பயன்படுத்தியும் பயனற்றது போன்று நம் முகமானது தெரியும். கோடை காலத்தில் நம் முகத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும் இருப்பதற்கு ஈஸியான சில டிப்ஸ்களை இந்த பதிவில் நாங்கள் பதிவிட்டுள்ளோம். அவற்றை படித்து பார்த்து இந்த வெயில் காலத்தில் நீங்களும் அதை ட்ரை செய்து உங்களுடைய சருமத்தை நீங்களும் அழகாக வைத்துக்கொள்ளுங்கள். வாங்க அந்த டிப்ஸ் என்னென்ன என்று கீழே விரிவாக படிக்கலாம்.
1 முறை ட்ரை பண்ணுங்க..! முகம் தங்கம் போல் மின்னும்..! |
தேன்:
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்தால் அது அப்படியே கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்துவிடும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதற்கு சுத்தமான தேனை முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும். இதனால் கருமையான முகம் வெண்மை நிறத்தில் மாறக்கூடும்.
ஜாதிக்காய் தூள் மற்றும் சந்தன தூள்:
முகம் வெண்மையாக மாறுவதற்கு ஜாதிக்காயின் தூளுடன் சம அளவிற்கு சந்தன தூள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து ஒரு பேஸ் பேக் தயாரிக்க வேண்டும். இதனை முகத்தில் 20 நிமிடம் தடவி வைத்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிட வேண்டும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கி வெயில் காலத்தில் முகம் ஜொலித்து காணப்படும்.
வெள்ளைத்தாமரை இதழ்:
ஒரு சில பெண்கள் நல்ல வெண்மை நிறத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கண்கள் பகுதி மற்றும் கண்களின் கீழ் பகுதி கருமை நிறத்தில் இருந்து சருமமே அழகில்லாதது போன்று இருக்கும். இதனால் வெயில் காலங்களில் கண் தோல் வறண்டு போய் சருமம் அழகாக காட்சி தராது. இதற்கு ஒரு வெள்ளை தாமரையின் இதழை எடுத்துக்கொண்டு 10 ml விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்ததை நாம் ஒரு கன்டைனரில் ஸ்டோர் செய்து நமக்கு தேவைப்படும் போதெல்லாம் கண்களில் இதனை தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிடவும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
முகம் வெள்ளையாக ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி..! |
கிர்ணி பழம்:
கிர்ணி பழம் என்று சொல்லக்கூடிய முலாம்பழத்தின் ஒரு சிறிய துண்டினை கையால் நன்றாக மசித்துவிட்டு பேஸ் பேக் போன்று சருமத்தில் தடவவும். இப்போது சருமத்தில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் நன்றாக பளிச்சென்று இருக்கும்.
முல்தானி மெட்டி பவுடர் மற்றும் தயிர்:
கோடை காலத்தில் முகம் வளவளப்பாகவும், மென்மையாகவும் இருப்பதற்கு முல்தானி மெட்டி பவுடர் சிறிதளவு அதனுடன் தயிர் மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ் பேக் தயாரிக்க வேண்டும். தயார் செய்த பேஸ் பேக்கினை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவி விட சருமம் நன்றாக பளிச்சென்று இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |