சமையலுக்கு தேவைப்படும் புளியை வைத்து முகத்தை அழகாக மாற்றலாம்..!

Advertisement

சருமம் அழகு பெற புளியை பயன்படுத்துங்கள்..!

நண்பர்களே வணக்கம் இன்று முகத்தை அழகாக மாற்றுவதற்கு வீட்டில் இருக்கும் புளியை வைத்து அருமையான பேஸ் பேக் எப்படி செய்வதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நாம் நிறைய வகையான பேஸ் பேக் பற்றி பார்த்திருப்போம். அது எப்படி புளியை வைத்து முகத்தை அழகாக மாற்றமுடியும் என்று அனைவரும் யோசிப்பீர்கள். நிச்சயம் மாற்ற முடியும். புளியை வைத்து எப்படி செய்ய முடியும் என்று யோசிக்கும் அனைவரும் இதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அப்படியென்றால் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சிடுக..! வாங்க பார்க்கலாம்.

Puli Face Pack in Tamil:

சிறிதளவு புளியை எடுத்து ஊறவைக்கவும். அதன் பின் அதனை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் நன்றாக 15 முதல் 20 நிமிடம் தேய்த்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும்.

ஒரே வாரத்தில் பொலிவு பன்மடங்கு அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

முகம் பளபளப்பாக:

தேவையான பொருட்கள்:

puli face pack in tamil

  • நாட்டு சர்க்கரை -2 ஸ்பூன் 
  • புளிக்கரைசல் -2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
  • பேக்கிங் சோடா -2 டீஸ்பூன்

மேல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக போட்டு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து பகுதி வரை மிருதுவாக பூசவும். இது இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவு பெற செய்கிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அளிக்கிறது.

முகச்சுருக்கம் நீங்க:

முகச்சுருக்கம் நீங்க

  • புளி -அரைக்கப்
  • தேயிலை 2ஸ்பூன் 

புளியை இரண்டு கப் நீரில் சேர்த்து வேகவைக்கவும் வேகவைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் பின்பு அந்த நீரில் தேயிலையை சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அதனை சுத்தமாக வடிகட்டி அதை முகத்தில் சுத்தமான பருத்தி துணியில் நனைத்து முகத்தில் துடைத்து வர இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.

முகப்பருக்கள் மறைய:

முகப்பருக்கள் மறைய

  • புளி- 1 கப்
  • அரிசி – அரை கப்
  • ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்.

புளிக்கரைசலை லேசாக அரிசியில் தெளித்து பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அது ஆறியதும் அதை பேஸ்ட் போல் அரைக்கவும். அந்த பேஸ்ட்டில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள பருக்கள் மறையும் அதேபோல் தழும்புகளும் மறையும்.

இளமையாக இருக்க வழிகள்:

இளமையாக இருக்க வழிகள்

  • புளிக்கரைசல் – 3 டீஸ்பூன்
  • ரவை – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 2 டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் புளிக்கரைசலை ஊற்றி ஆதில் ரவை பின் கடலை மாவு, தேன் சேர்த்து ஒவ்வொன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவை 15 நிமிடம் வரை காத்திருக்கவும் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிய பின் முகத்திற்கு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும் முகம் இளமையாக இருக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement