அக்குள் கருமை 5 நிமிடத்தில் சரியாக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!

Advertisement

Underarm Whitening Home Remedy in Tamil

ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் அக்குள் கருமை. மேலும் இந்த பிரச்சனை கழுத்து மற்றும் தொடை பகுதிகளிலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதாவது சரியாக பராமரிக்காமல் இருப்பது, பெண்கள் கழுத்தில் அதிகம் ஜெயின் அணிந்துகொள்வது, உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த கருமையை அகற்ற கடைகளில் விற்கப்படும் கிரீமை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.. நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தியே இந்த கருமையை நாம் முழுமையாக அகற்ற முடியும். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

அக்குள் கருமை நீங்க டிப்ஸ் – Akkul Karumai Neenga:

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – இரு ஸ்பூன்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த கலவையை எங்கெல்லாம் கருமை உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்து 5 நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடம் காத்திருக்கவும். 5 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டாம்.

அப்ளை செய்த கலவை மீது இன்னொரு பேக் அப்ளை செய்ய வேண்டும், அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.அக்குள் கருமை

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
  • சர்க்கரை – ஒரு ஸ்பூன்
  • தக்காளி – 1

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி ஒரு பாதி தக்காளி துண்டு சாறு பிழிந்து ஊற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதற்காக தண்ணீர் அதிகம் சேர்த்துவிட வேண்டாம்.

பிறகு இந்த கலவை மீண்டும் கருமை உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள், பின் எடுத்து வைத்துள்ள 1/2 தக்காளி பழத்தை கொண்டு நன்றாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

இந்த இரண்டு டிப்ஸையும் இரண்டு அல்லது மூன்று நாள் செய்து வந்தால் போதும் அக்குள் கருமை, கழுத்து பகுதியில் இருக்கும் கருமை மற்றும் தொடை பகுதியில் உள்ள கருமை அனைத்தும் அகன்று விடும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement