வெள்ளை முடி கருப்பாக டிப்ஸ் | Vellai Mudi Karupaga Tips in Tamil
இன்றைய கால கட்டத்தில் சிறிய வயதிலேயே நரைமுடி பிரச்சனை வந்துவிடுகிறது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சிலர் இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். பலர் இந்த விஷத்தை நினைத்து மிகவும்கலவைப்படுவார்கள். இனி அப்படி கவலைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராக. அப்படியென்றால் இனி அந்த கவலையை விட்டுத்தள்ளுங்க. உங்களுக்காக தான் இந்த பதிவு நரை முடியை ஒரே வாரத்தில் கருமையாக்க கூடிய கூந்தல் எண்ணெயை தயார் செய்வதை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த கூந்தல் எண்ணெய் தயார் செய்வதற்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும். மிக எளிதாக தயார் செய்துவிடலாம். சரி வாங்க அவற்றை எப்படி தயார் செய்ய வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது பார்த்திடுவோம்.
Vellai Mudi Karupaga:
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
- கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
- மருதாணி – ஒரு கையளவு
கூந்தல் எண்ணெய் தயார் செய்யும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள்ளுங்கள். முக்கியமாக இவற்றை தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது.
கருஞ்சீரகத்தை அரைத்த பிறகு ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு மருதாணியுடன் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து இவற்றையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அவற்றையும் ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். எண்ணெய் தயார் செய்வதற்கு பொருட்கள் இப்பொழுது தயார் ஆகிவிட்டது. இப்பொழுது எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைக்கவும், வாணலி சூடானதும் 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் முதலில் அரைத்து வைத்த கருஞ்சீரகத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
கருஞ்சீரகம் நன்கு பொரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள மருதாணியை அவற்றில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். இந்த சமயத்தில் அடுப்பை குறைவான தீயில் வைத்துவிடுங்கள். பிறகு 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை கரண்டியை பயன்படுத்தி கிளறி கொண்டே இருங்கள் இவ்வாறு செய்வதினால் கருஞ்சீரகம் மற்றும் மருதாணியில் உள்ள எசன்ஸ் எண்ணெயில் முழுமையாக இறங்கும்.
15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து காச்சிய எண்ணெய்யை நன்றாக ஆறவைக்கவும். நன்றாக ஆறிய பிறகு வடிகட்டி வெயிலில் ஒரு மணிநேரம் வைக்கவும். பின் காற்றுப்புகாத பாடலில் அடைத்து தலைக்கு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை தினமும் கூந்தல் எண்ணெயாக பயன்படுத்தலாம், அல்லது இருநாள்விட்டு ஒருநாள் தலைக்கும் தேய்த்து வரலாம். இவ்வாறு ஒருவாரம் மட்டும் தேய்த்து வந்தால் போதும் தலைமுடி நன்றாக கருமையாக மாறிவிடும். இதுமட்டும் இல்லாமல் முடி நன்கு அடர்த்தியாக நீளமாக வளரும். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |