நரை முடி முற்றிலும் மாற..! ஒரு தடவை இதை தேய்த்தால் போதும்..!

White hair Problem Solution In Tamil

நரை முடி நீங்க என்ன செய்ய வேண்டும்..! White hair Remove Tips In Tamil..!

White hair Problem Solution In Tamil: அனைவருக்கும் பொதுநலமின் அன்பான வணக்கங்கள்..! இன்றைய பதிவில் நரை முடியை முற்றிலும் கருமையாக மாற்ற சூப்பர் டிப்ஸ் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். நரைமுடி இப்போது சிறியவர் முதல் பெரியவர்களுக்கு இயல்பாகவே வருகிறது. நரை முடி பிரச்சனை உடலில் ஏதேனும் சத்து குறைபாடுகள் இருந்தால் இந்த நரை முடி வர காரணமாகும். அதுமட்டும் இல்லாமல் உடலில் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் இது போன்ற விளைவுகள் ஏற்படலாம். நரை முடிக்காக வேறு கெமிக்கல் பொருள்களை தலையில் தடவி வருவதாலும் பல விளைவுகள் வரும். இது பலருக்கும் தெரிகிறது இல்லை. வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை பொருளை வைத்தே நரை முடியினை சுலபமாக தவிர்க்கலாம். சரி இப்போது நரை முடி வராமல் தடுக்க ஈஸியான டிப்ஸை பார்க்கலாம் வாங்க..!

newநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..!

நரை முடி கருப்பாக – தேவையான பொருட்கள்:

  1. கடுகு எண்ணெய் – 1 அல்லது 2 ஸ்பூன்(முடிக்கு ஏற்றவாறு)
  2. எலுமிச்சை சாறு – 5 அல்லது 6 ட்ராப்ஸ் 
  3. விளக்கெண்ணெய் – 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் 

ஸ்டேப் 1:

நரை முடி முழுவதுமாக மாறுவதற்கு ஒரு சுத்தமான பவுலில் கடுகு எண்ணெயினை 1 அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்து இதில் எலுமிச்சை சாறு 5 அல்லது 6 ட்ராப்ஸ்கள் கடுகு எண்ணெயுடன் சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 2:

எலுமிச்சை சாற்றினை சேர்த்த பிறகு விளக்கெண்ணெய் 1/2 ஸ்பூன் அல்லது 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்து வைத்துள்ளதை இரவு படுக்கைக்கு முன் தலையில் நரை முடி உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.

இதனை தடவுவதற்கு முன் சீப்பினால் தலையை நன்கு வாரிக்கொள்ளவும். அதன் பிறகு கலந்து வைத்துள்ள கலவையினை நரை முடி இடத்தில் தடவிவரவும்.

ஸ்டேப் 3:

அடுத்து தலையினை 4 அல்லது 5 நிமிடம் வரை பொறுமையாக மசாஜ் போல் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை இரவு முழுவதும் தலையில் வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயினை அப்படியே வைத்தும் கொள்ளலாம் அல்லது ஷாம்பூவால் வாஷ் செய்யலாம்.

இந்த டிப்ஸை முதல் 7 நாட்களுக்கு செய்து வர உங்கள் கூந்தலானது சாம்பல் நிறத்தில் மாறி பின்பு முற்றிலுமாக கருமையாக மாறிவிடும்.

newஇளநரையைத் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..! How to make amla oil for grey hair..! narai mudi karupaga tips in tamil..!

குறிப்புகள்:

கடுகு எண்ணெயினை தலை முடிக்கு பயன்படுத்துவதால் கூந்தல் நன்கு வளர செய்கிறது. முடியானது நன்றாக ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்கும். கடுகு எண்ணெயில் உள்ள Fatty அமிலம்நரை முடியை கருமையாக மாற்ற பெரிதும் உதவியாக உள்ளது.

எலுமிச்சை சாற்றினை பயன்படுத்துவதால் பலருக்கும் தலை முடி கருமையாக மாறாமல் முடி உதிர்வு ஏற்படும் என்ற மனநிலை இருக்கும். எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு தடவாமல் வேறு எண்ணெயில் கலந்து தடவி வர வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி, நரை முடி தொந்தரவுக்கு மிகவும் நல்லது.

எலுமிச்சையில் இருக்கும் ப்ரோடீன், வைட்டமின் சத்துக்கள் தலை முடியினை எப்போதும் போஷாக்காகவும், நரை முடியை கருமையாக மாற்றும்.

விளக்கெண்ணெயினை நம் பாரம்பரியமாக தலை முடிக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். விளக்கெண்ணெய் எப்போதும் முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும், மிருதுவாகவும் வளர உதவி செய்கிறது. விளக்கெண்ணெய் நரை முடியினை மட்டும் சரி செய்வதோடு இல்லாமல் தலை முடி உடைந்து போகாமல் நன்கு வளருவதற்கு உதவி செய்கிறது.

newநரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை..!Natural Hair dye in Tamil..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil