முடி அனைத்தும் வெள்ளையாக இருந்தாலும் சரி அதை கருமையாக மாற்ற இந்த பூ மட்டும் போதும்..!

Advertisement

நரைமுடி கருமையாக மாற | White Hair Solution Home Remedies

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளை பற்றி தான் கூறுகிறேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையிலேயே சரி செய்யலாம்.

ஆனால் நாம் அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதனால் மேலும் பாதிப்புகள் தான் வருகிறது. அப்படி நமக்கு வரும் பிரச்சனைகளில் நரைமுடி பிரச்சனையும் ஓன்று. இந்த நரைமுடி பிரச்சனையை இயற்கையான முறையில் எப்படி கருமையாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

White Hair Solution Home Remedies in Tamil:

  1. டீத்தூள் – 2 ஸ்பூன்
  2. காபி தூள் – சிறிதளவு
  3. நித்திய கல்யாணி பூ – தேவையான அளவு

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

டீத்தூள் 2 ஸ்பூன்

முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.

பின் அதில் டீத்தூள் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு போட்டு நன்றாக 10 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

niththiya kalyani poo

பின் மிக்சி ஜாரில் நித்திய கல்யாணி பூ 1 கைப்பிடி அளவு போட்டு அதில் நாம் எடுத்து வைத்துள்ள டீத்தூள் கஷாயத்தையும் ஊற்றி கொள்ள வேண்டும். பின் இரண்டையும் நன்றாக அரைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து அதில் காபி தூள் 1 ஸ்பூன் அளவிற்கு போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் அதை ஒரு கடாயில் ஊற்றி 15 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அது கருமையாக மாறியதும் அதை உங்கள் முடியில் அப்ளை செய்து, குறைந்தது 30 நிமிடம் வரை தலையில் அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் தலையை அலசி கொள்ளவும். இதுபோல செய்து வந்தால் உங்கள் முடி வேரிலிருந்தே கருமையாக மாறும்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement