குரு திசை பலன்கள் | Guru Dasa Palangal in Tamil

Guru Thisai Palangal in Tamil

குரு தசா புத்தி பலன்கள் | Dasa Puthi Palangal in Tamil

Guru Thisai Palangal in Tamil / குரு திசை பலன்கள்: வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு இப்போது குரு தசா நடக்கிறதா? அப்படியென்றால் அவர்களுக்கு குரு பகவான் எப்படிப்பட்ட நற்பலன்களை கொடுக்கிறார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுவோம். குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ராசிகளை கையாளுவது மட்டுமல்லாமல் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர். குரு பகவான் மகர ராசியில் வலு இழந்து நீசமாகக்கூடியவர். கடகத்தில் உச்சத்தை அடையக்கூடியவர். குரு தசா நடக்கும் ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுப்பார் என்பதை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newஅதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு தசா காலம்:

Guru Thisai Palangal in Tamilகுரு பகவான் ஒரு நபருக்கு 16 ஆண்டு காலம் குரு தசவாக ராசியில் அமர்ந்திருப்பார். குரு பகவான் இந்த நேரத்தில் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாட்டுடன் செயல்படுவார். குரு தசா நடக்கும் காலத்தில் வருமானமானது செழித்து காணப்படும், புதிதாக ஆடை, அணிகலன்கள் வாங்குவதற்கு யோகம் கிடைக்கும்.

மேலும் இவர்கள் செய்யும் செயலை சிறப்பாக செய்வதோடு இல்லாமல் பிறருக்கு ஆலோசனைகள் வழங்குவதில் உயர்ந்த இடையில் இருந்தாலும் அடுத்தவர்களை மதிக்கும் குணம் உடையவர்கள். இது போன்ற காரகங்களைக் கொண்டு குரு பகவான் 16 வருட தசா பலன்களை அருள்வார்.

குரு தசைக்கான காலம்:

கேது தசை காலம்07 ஆண்டு
சுக்கிரன் தசை காலம்20 ஆண்டு
சூரியன் தசை காலம்6 ஆண்டு
சந்திரன் தசை காலம்10 ஆண்டு
செவ்வாய் தசை காலம்7 ஆண்டு
ராகு தசை காலம்18 ஆண்டு
குரு தசை காலம்16 ஆண்டு
சனி தசை காலம்19 ஆண்டு
புதன் தசை காலம்17 ஆண்டு

 

இந்த வரிசையில் தான் குருவின் தசா காலமானது வரும். உங்கள் ஜாதகத்தில் கூறப்பட்டுள்ள  தசா கால இருப்பை அறிந்து கொண்டு உங்களுக்கு எப்போது குரு தசா வரும் என்பதை இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

எந்த ராசிக்கு யோகம் தருவார்?

 Guru Dasa Palangal in Tamil

குரு தசா புத்தி பலன்கள்: தனுசு மற்றும் மீன ராசியில் குரு இப்போது கையாளுவதால் தனுசு, மீனம், கடகம், சிம்மம், மேஷம், விருச்சிக லக்னம் கொண்ட ராசிக்காரர்களுக்கு  குரு பகவான் யோக பலனை அள்ளி தருவார்.

ஜனன கால ஜாதகத்தில் லக்கினத்தில் அல்லது ராசியில் குரு இருப்பதால் ஏதேனும் ஒரு வகையில் உங்களை மேன்மை அடைய வைக்கக்கூடிய நிலையை குரு அருள்வார்.

newஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!

எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கொடுக்கமாட்டார்?

 Guru Thisai Palangal in Tamil

குருவின் பகை கிரகங்களான சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் ஆளக்கூடிய ராசிகளுக்கு குரு பகவான் யோகத்தை கொடுக்கமாட்டார். அந்த வகையில், ரிஷபம் , துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்ப லக்கனகாரர்களுக்கு குரு தசா நடக்கும் போது யோக பலனைத் குரு தரமாட்டார்.

குரு பகவான் முழு சுப கிரகம் என்பதால், நல்ல பலனை கொடுக்காவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார். மற்ற கிரகங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது குருவின் கெடுபலன் குறைந்தளவுத்தான் இருக்கும்.

குரு பார்வை பலன்:

 Guru Dasa Palangal in Tamil

guru thisai palangal in tamil: கோச்சாரத்தில் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருடம்  காலம் சஞ்சரிக்கக்கூடியவர் குரு. ஒரு ராசியில் அமர்ந்து தனது 5, 7, 9 ஆகிய பார்வை மூலமாக நிறைய  யோக பலன்களை கொடுப்பார். இதன் மூலம் அந்த பார்வையைப் பெறும் ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சுப நிகழ்வு, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் பாக்கியம், மன மகிழ்ச்சி ஆகியவற்றை தந்தருள்வார்.

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் பொருந்திய தீய கிரகங்களான (ராகு -கேது) மீது இருப்பது மிகவும் நல்லது. அப்படி அமைவதால் குரு தசா நடக்கும் காலத்தில் குருவின் பார்வை பட்டு, தீய கிரகங்களாக இருந்தாலும் கூட சுபமாகி நல்ல பலன்களை அருளக் கூடியவர்களாக இருப்பார்கள்.

குருவின் கடுமையான பார்வை எது:

 Dasa Puthi Palangal in Tamilguru dasa palangal in tamil: குருவின் பார்வை எந்த இடத்தைப் பார்க்கிறதோ அந்த இடம் விருத்தி அடையக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் குருவின் பார்வை ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் அவர்களுக்கு கடன் பிரச்சனை, நோய், பகைவர்களால் பல பிரச்சனை உருவாகும். இருப்பினும் அது சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.

அதே சமயம் லக்கினத்தின் பாதகாதிபதியை இவர் பார்க்கும் போது பாதகாதிபதி அதிக வலிமை பெற்று தனது தசா, புத்தி காலத்தில் கடுமையான பாதாக பலனைத் தருவார். லக்கின விரோதிகளின் மீது இவர் பார்வை படக்கூடாது. அப்படி படும் போது அவர்களை வலுவாக்கும்.

குரு பகவான் இருக்கும் இடத்திற்கான பலன் என்ன:

 Guru Thisai Palangal in Tamilகுரு அமர்ந்து இருக்கும் இடத்தை விட அவருடைய பார்வைக்கு தான் அதிக பலன்  உண்டு. அதாவது குரு இருக்கும் இடத்திற்கு எந்த ஒரு நற்பலனையும் செய்யமாட்டார். அவரின் பார்வை படக்கூடிய இடங்கள் மட்டும் சுபமாகும். அல்லது செய்கின்ற காரிய விருத்தியாகும். குரு பகவான் தனியாக இல்லாமல், ஏதேனும் ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் நல்லது. குரு ஜாதகத்தில் மிதுனம், கன்னி லக்கினங்களைத் தவிர்த்து மற்ற லக்கின தாரர்களுக்கு குரு வலு இழக்காமல் இருப்பது நல்லது.

குரு பகவான் தரக்கூடிய தொழில் பலன்கள்:

 Guru Thisai Palangal in Tamil

குரு பகவானுடன் சேர்ந்த கிரகங்களைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் சிறு சிறு மாற்றங்களுடன் தொழிலானது அமையும். சுயமாக தொழில் செய்பவர்கள் முதலாளியாகவும். ஆன்மீக ரீதியாக அடிமைத் தொழில் செய்வார் என இருப்பின், அவர் கல்வி சார்ந்த பணிகளான ஆசிரியர், பள்ளி நிர்வாகம், கல்வி சார்ந்த பொருட்களை விற்பனை செய்தல், கல்லூரியில் கடை அல்லது உணவகம் நடத்துதல் போன்ற வேலைகளில், கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் வேலை செய்யலாம்.

குருவின் அருள் வேலைகள் / தொழில்:

 Guru Dasa Palangal in Tamil

நீதித் துறை, தங்கம், வங்கி, கல்வி நிறுவனம், கல்வி பயிற்சி அளித்தல், மஞ்சள் நிற பொருட்களை விற்பனை செய்தல், ஆன்மிக சம்பந்தமான துறையில், கெளரவமான தொழில் செய்து வந்தால் குரு யோக பலனை கொடுப்பார்.

வியாழன் திசை பலன்கள்:

வியாழன் திசை பலன்கள்

வியாழன் தசையில் முதலில் துவங்குவது வியாழன் புத்தியாகும்.

வியாழன் தசையில் புத்திகளில் நேர அளவு:

  1. வியாழன் 2 ஆண்டு 1 திங்கள் 18 நாள்
  2. காரி 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்
  3. அறிவன் 2 ஆண்டு 3 திங்கள் 6 நாள்
  4. கேது 11 திங்கள் 6 நாள்
  5. வெள்ளி 2 ஆண்டு 8 திங்கள்
  6. ஞாயிறு 9 திங்கள் 18 நாள்
  7. நிலவு 1 ஆண்டு 4 திங்கள்
  8. செவ்வாய் 11 திங்கள் 6 நாள்
  9. இராகு 2 ஆண்டு 4 திங்கள் 24 நாள் (குரு திசை ராகு புத்தி பலன்கள்)

1.  வியாழன் புத்தி: அதிகமாக பொருள் சேரும், புதிதாக நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், அரசாங்கத்தால் பலன், செல்வம் என மகிழ்வான நேரமிது

2.  காரி புத்தி: புதிதாக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.  வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்குவீர்கள். துன்பம் வந்தாலும் தானாக ஓடி விடும்.

3.  அறிவன் புத்தி: பணவரவு அதிகரிக்கும். ஆடல் பாடல் என மகிழ்ச்சி கிடைக்கும்.  அறிவாற்றல் அதிகரிக்கும்.  கஷ்டம் நீங்கி செல்வம் பெருகும். மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

4.  கேது புத்தி: உலகம் சுற்றும் நேரமிது. வெளியில் அதிக அலைச்சலின் காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.  இடம் பெயறுதல் என்பது தவிர்க்க இயலாதது.

5.  வெள்ளி புத்தி: வீட்டில் ஆடு, கோழி, மாடு என பிராணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடை, அணிகலன்கள், வீட்டிற்கு தேவைப்படும் பொருளை  சேர்ப்பீர்கள். புதிய நிலம் வாங்குவீர்கள்.

6.  ஞாயிறு புத்தி: தீய செயல்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் மட்டும் கிடைக்கும்.  மனதில் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். நோய் நீங்கும். பகை வரும், ஆனால் அது நன்மையே.

7.  நிலவு புத்தி: முத்து, பவளம், வெள்ளி, தங்கம், திருமணம், பொருள் சேர்க்கை, அறிவு, குழந்தை பாக்கியம், என எல்லா நல்ல செயல்களும் நடக்கும்.  கடவுள் நம்பிக்கை நலம் தரும்.

8.  செவ்வாய் புத்தி: மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவடையும்.  நெருப்பால் தீங்கு வரும்.  உடலில் நோய் நொடிகள் வந்து விலகும்.  புற்றார் பகை நன்மையில் முடியும்.

9.  இராகு புத்தி (குரு திசை ராகு புத்தி பலன்கள்):  நீதிமன்றம் நாடிச்செல்லும் நிலை வரும்.  பகை உண்டாகும்.  வாழ்க்கை துணையுடன் அமைதியாக வாழ பழகுங்கள்.  ஏதேனும் பொருள் சேதம் அடைவதற்கு வாய்ப்புள்ளது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்