பெண் சாபம் நீங்க | Pen Sabam Pariharam | Pen Sabam Neenga

Advertisement

பெண் சாபம் நீங்க பரிகாரம் | Pen Sabam Neenga Pariharam 

நாம் வாழ்வில் படும் பல கஷ்டங்களுக்கு முதன்மை காரணமாக இருப்பது பலர் நமக்கு கொடுக்கும் சாபங்களையே கூறலாம். அதிலும் நம் முன்னோர்கள் பெண் சாபம் பொல்லாதது என்று கூறி வைத்து சென்றுள்ளார்கள். சாபங்களில் குல தெய்வ சாபம், ரிஷி சாபம், கோ சாபம் போன்ற பல சாபங்கள் இருந்தாலும் இதெல்லாம் நம்முடைய குடும்பத்திலிருந்து ஏற்படக்கூடிய சாபம் இல்லை. நமது குடும்பத்திலிருந்து ஏற்படக்கூடிய சாபமாக இருப்பது பெண் சாபம் மட்டுமே. ஆமாம் பெண்களின் சாபத்திற்கு வலிமை அதிகம் என்று ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க இந்த பதிவில் பெண் சாபத்திற்கான காரணம் மற்றும் அதன் பரிகாரங்களை படித்து பெண் சாபத்தினை நீக்குவோம்..

முன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்

பெண்களின் சாபம் ஏற்படுவதற்கான காரணம்:

  • அன்றைய காலத்திலே நம் முன்னோர்கள் வீட்டின் மகாலட்சுமியாக பெண்களை வைத்திருந்தார்கள். பெண்கள் அனைவருமே ஒரு கட்டம் வரைதான் தன் தாயின் வீட்டில் இருக்க முடியும். குறிப்பிட்ட காலத்திலே தாய் வீட்டிலிருந்து திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
  • புகுந்த வீட்டிற்கு சென்றாலும் பெண்களுக்கு எப்போதும் தன் தாய் வீட்டில் உள்ளவர்களின் மீது கொஞ்சம் பாசம் அதிகமாகத்தான் இருக்கும். அத்தகைய பாசம் உள்ள அண்ணனோ, தம்பியோ, தங்கை அல்லது மற்றவர்களோ ஏதேனும் அந்த பெண்ணை அவதூறாக பேசும் போது அப்பெண் மனம் கலங்கி சில வார்த்தைகளை கொட்டி தீர்த்துவிடுவாள்.
  • அந்த நேரத்தில் பெண்கள் விடும் வார்த்தைகளானது தான் பெண் சாபமாக மாறுகிறது.
  • தான் பெற்ற மகளை போல தன் அக்கா, தங்கையை பார்த்துக்கொள்ளும் ஆண் மகனுக்கு வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

பெண் சாபம் பலிக்குமா?

  • திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணை கணவன் கொடுமை செய்வது, திருமணம் செய்த பெண்ணை விட்டு விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்வது போன்ற கொடிய செயல்களால் அந்த ஆண்களுக்கு கண்டிப்பாக பெண் சாபம் கிடைக்கும்.
  • எந்த ஒரு பெண்ணையும் நம்பிக்கை துரோகம் செய்து அவளை ஏமாற்றினால் அந்த பெண் மனம் உருகி துரோகம் செய்த ஆணுக்கு சாபம் அளித்தால் நிச்சயமாக பெண் சாபம் பலிக்கும்.
சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்

தாய் சாபம்:

  • தாயானவள் தன்னுடைய குழந்தையை 10 மாதம் வரை சுமந்து குழந்தைக்கு தேவையான அனைத்து பக்குவங்களையும் செய்து, அவர்களுக்கு திருமண காலம் வரை உதவிகரமாக இருக்கக்கூடியவள்.
  • தன்னுடைய வயதான காலத்தில் அவளுடைய கணவனை இழந்து வாடும் போது அவர்களை யாரேனும் கவனித்துக்கொள்ளாமல் இருந்தால் தாயின் சாபம் கண்டிப்பாக குழந்தைகளை பலி வாங்கும்.
  • பெண்களினால் பல முறையில் சாபங்கள் ஏற்படுகிறது. ஒரு பெண் விடும் சாபமானது ஒருவரை மட்டும் பலி வாங்காமல் தன்னுடைய பரம்பரைக்கே பாதிப்பினை ஏற்படுத்தும்.

பெண் சாபம் நீங்க பரிகாரம்:

  • ஒருவருக்கு பெண் சாபம் நீங்க பைரவ கடவுளை வழிபாடு செய்து வரலாம்.
  • பைரவரின் அவதார நாளான கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி அன்று வரும் பைரவாஷ்டமி தினத்தில் பைரவருக்கு அபிஷேகம் செய்து வடமாலை சார்த்தி வழிபட்டால் பெண் சாபம் நீங்கும்.
  • தங்களுக்கு சாபம் கொடுத்த பெண்ணின் வயது தெரிந்தால் அந்த வயதில் உள்ள கன்னி பெண்களுக்கு புடவை, வளையல் போன்றவற்றை தானம் செய்து அவள் மனதை குளிர வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெண் சாபம் நீங்கும்.
இது போன்ற ஆன்மிக தகவலக்கை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement