நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்திருப்பீர்கள் என்பதை தெரிந்துகொள்வோமா.!

Advertisement

முன் ஜென்மம் பற்றி அறிதல் | Mun Jenmam Patri Ariya in Tamil 

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் அனைவரும் யோசிக்கின்ற ஒன்றை பற்றி தான் காணப்போகிறோம். அது ஒன்றுமில்லை நாம் போன ஜென்மத்தில் என்னவாக பிறந்திருப்போம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். அடுத்த ஜென்மத்தில் இதுவாக மட்டும் பிறக்கவே கூடாது என்று சிலர் சொல்வார்கள். சில பேர் அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்வார்கள். இதை எப்படி சொல்கிறீர்கள். இப்போது வாழ்கின்ற வாழ்க்கையை வைத்து சொல்கிறீர்கள். ஆனால் நாம் முன் ஜென்மத்தில் இப்படி தான் இருந்திருப்போம் என்று யோசித்திருக்கிர்களா.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்தநாள் என்பது மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. ஒருவருடைய பிறந்தநாள் தான் அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கிறது. பிறந்த தேதி மற்றும் நேரத்தினை வைத்துதான் அவர்களுக்கு ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நாளினை வைத்து உங்களது முன்ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதையும் துல்லியமாக கூறிவிட முடியும். உங்கள் பிறந்தநாளை வைத்து நீங்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்திருப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களின் பிறந்த தேதி பலன்களை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள் ⇒ பிறந்த தேதி பலன்கள்

முன் ஜென்மம் அறிவது எப்படி?

முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருந்துருப்பீர்கள்  என்பதை பிறந்த தேதியை வைத்து கண்டுபிடிக்கலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

எடுத்துக்காட்டாக 25.12.1998 இந்த தேதியில் பிறந்திருக்கிறீர்கள். இப்போது பிறந்த தேதி  எண்களை கூட்ட வேண்டும். 2+5+1+2+1+9+9+8= 37 இது இரண்டு எண்களாக இருக்கிறது. ஆனால் நமக்கு ஒற்றை எண்ணாக வர வேண்டும். அதற்கு வந்த பதிலை 37 -யை 3+7=10 மறுபடியும் 1+0=1 இப்போது வந்த பதில் 1 தான் விதி எண்.

அடுத்து அக எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உங்கள் பெயரில்  உள்ள Vowels -யை கூட்ட வேண்டும். A என்றால் 1, E என்றால் 5,  I என்றால் 5, O என்றால் 6, U என்றால் 3. 

எடுத்துக்காட்டாக Ranjith என்ற பெயரில் Vowels-ஐ கூட்ட வேண்டும். இந்த பெயரில் உள்ள Vowels A=1, I=5  இப்போது இரண்டிலும் வந்த பதிலை கூட்ட வேண்டும். 1+5=6. இப்போது அக எண் 6. இதுவே இரட்டை எண்களாக வந்தால் ஒற்றை எண்ணாக குறைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 16 என்றால் 1+6=7 என்று குறைக்க வேண்டும்.

முன் ஜென்மம் வாழ்க்கை எண்:

விதி எண்ணையும், அக எண்ணையும்  கூட்டி கிடைக்கும் பதில் முன் ஜென்மம் வாழ்க்கை எண். விதி எண் 1, அக எண் 6, இரண்டையும் கூட்டினால் 7 தான் முன் ஜென்மம் வாழ்க்கை எண்ணாகும்.

முன் ஜென்மம் எண் 1 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில்  செல்வ செழிப்போடு இருந்திருப்பீர்கள். அரசியல் அல்லது காவல் துறையில் இருந்திருப்பீர்கள். முன் ஜென்மத்தில் உங்களின் முடிவுகளில் தான் அனைத்து செயல்களும் நடக்கும்.

முன் ஜென்மம் எண் 2 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்திருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் குழப்பமான மன நிலையில் இருந்திருப்பீர்கள். அதுவே நீங்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கும்.

முன் ஜென்மம் எண் 3 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் சினிமா துறையில் இருந்திருப்பீர்கள். இல்லையெனில் chef, தோட்டக்காரர் அல்லது Home Interior Designer ஆக இருந்திருப்பீர்கள். எளிமையான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பீர்கள்.

முன் ஜென்மம் எண் 4 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் ராணுவத்தில் இருந்திருப்பீர்கள். இல்லையென்றால் காவலர் அல்லது மாஸ்டராக இருந்திருப்பீர்கள். வாழ்க்கையில் தனிமையாகவே இருந்திருப்பீர்கள்.

முன் ஜென்மம் எண் 5 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் கஷ்டமாக வாழ்ந்திருப்பீர்கள். அதாவது போர் அல்லது சண்டை வரும் சூழ்நிலைகளில் வாழ்ந்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலும் அமைதி குறைந்து காணப்படுவீர்கள்.

முன் ஜென்மம் எண் 6 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் மத ஆர்வம், ஆன்மிகவாதி அல்லது நடிப்பு துறையில் இருந்திருப்பீர்கள்.

முன் ஜென்மம் எண் 7 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் அறிவுரை சொல்வதில் வல்லுனராக இருந்திருப்பீர்கள். இல்லையெனில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருந்திருப்பீர்கள்.

முன் ஜென்மம் எண் 8 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் செல்வ செழிப்போடு இருந்திருப்பீர்கள். இல்லையெனில் நல்ல மதிப்போடு இருந்திருப்பீர்கள்.

முன் ஜென்மம் எண் 9 என்றால்:

நீங்கள் முன் ஜென்மத்தில் மன நோய் நிபுணர் அல்லது ஜோதிடராக இருந்திருப்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement