திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலின் விவரங்கள்..! திங்களூர் கோவில் வரலாறு..!

kailasanathar temple

கைலாசநாதர் திருக்கோவிலின் (kailasanathar temple) விவரங்கள்..!

நவகிரகத் தலங்களுள் சந்திரன் தலம் திங்களூர் ஆகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் (kailasanathar temple) அமைந்துள்ளது.

தல விவரங்கள்:

மூலவர்: கைலாசநாதர்
அம்மன்/தயார்: பெரியநாயகி
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சந்திரபுஷ்கரிணி
ஊர்: திங்களூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு

 

கைலாசநாதர் கோயில் தல வரலாறு:

திங்களூர் கோவில் வரலாறு: தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலகால விஷம் வெளிப்பட்டது.

அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்றுகொண்டு இருந்தனர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார்.

ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்துவிட்டனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.

அப்பூதி அடிகள்:

இத்தலம் அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம். அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது.

திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். ”திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும்”, என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். (திருநாவுக்கரசர்) பாடிய பாடல்கள் பத்தும் “திருப்பதிகம்” என்றழைக்கப்படுகின்றன.

தல சிறப்பு:

தமிழகத்தில் அன்னப்பிரசாத்திற்கு மிக சிறப்பு வாய்ந்த தலமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுவதினால், அன்று சூரிய பூஜையும் மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திரன் ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.

இத்தலத்தில் சந்திர பாகவனுக்கு தனி சந்நிதி உள்ளது.

திங்களூரில் நாகம் தீண்டினால், பாம்பு கடித்தவருக்கு விஷம் ஏறாது என்பது தனி சிறப்பு.

சந்திர தோஷம் நீங்க:

சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பிராத்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க பிராத்தனை செய்கின்றன.

ஆவியின் அமைப்பு:

கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்தில் தெற்கில் உள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது.

கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கை நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கை நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு முன் சந்திரன் தீர்த்தம் அமைந்துள்ளது.

வெளிப்பிரகாரம் வளம் வரும்போது விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டாத்தில் அமர்ந்த நிலையில் தட்சணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதி,உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி மற்றும் பைரவர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளது.

திங்களூர் செல்லும் வழி:-

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வரும் திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மி. தொலைவிலுள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

ஆலய முகவரி:

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (kailasanathar otemple)
திங்களூர்
திருப்பழனம் அஞ்சல்
வழி திருவையாறு
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 613204.

திங்களூர் கோவில் நேரம்:

தினந்தோறும் இந்த ஆலயம் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை திறந்திருக்கும். அதன் பிறகு மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்