அரிசி பற்றிய ஆன்மிக தகவல்கள் – Aanmigam Thagaval
ஆன்மிக நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. பொதுவாக அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக மாதம் ஒரு முறை அரிசி வாங்குவோம். அல்லது வாரத்திற்கு ஒரு அரிசி வாங்குவோம். இது அவர்களது வருமானத்தை பொறுத்தது. இருப்பினும் அந்த அரிசியை கூட வாங்க முடியாத அளவிற்கு சில வீடுகளில் கஷ்டம் இருக்கும். அங்குதான் பிரச்சனை இருக்கிறது. ஆன்மிகம் சாஸ்த்திரம் படி பொதுவாக அரிசி வாங்குவதற்கென்று ஒரு தினம் இருக்கிறது. அந்த தினத்தில் நாம் அரிசி வாங்கினோம் என்றால் வீட்டில் செல்வவளம் பெருகும். சரி வாங்க இன்றைய பதிவில் அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை பற்றி அறியலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அட்டாச்சிடு பாத்ரூம் வைத்திருப்பவர்கள் வாஸ்துப்படி இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும்..!
பசியை போக்கக்கூடிய இந்த அரிசியை நாம் திங்கட்கிழமை அன்று வாங்கினோம் என்றால் நமது வீட்டிற்கு செல்வ வளத்தை கொடுக்கும்.
ஆக மாதம் மாதம் அரிசி வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, வாரம் வாரம் அரிசி வாங்குபவர்களாக இருந்தாலும் சரி அந்த அரிசியை திங்கட்கிழமை அன்று வாங்கவும். அப்படி வாங்கும் அரிசியை நீங்கள் கடனுக்காக வாங்கிவிட கூடாது. காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்.
ஒரு வேளை கடனுக்காக அரிசியை வாங்குனீர்கள் என்றால் வீட்டில் கஷ்டம் தான் அதிகரிக்கும். கடைகளில் அக்கௌன்ட் வைத்து பொருட்களை வாங்குபவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் அரிசிக்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு அரிசியை வாங்கவும்.
இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்து நிற்கும்.
உங்களுக்கு நிறைய கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், அரிசியை திங்கட்கிழமையில் மட்டும் வாங்கி பாருங்கள். உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
அதேபோல் அரிசி பானையை அலமாரியின் மேல் வைக்க வேண்டாம், தரையிலேயே வைக்கவும். மேலும் அரிசி பானையில் அரிசியை அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு இருக்க வேண்டும். ஆழாக்கு பயன்படுத்தாதவர்கள் ஒரு டம்ளரையாவது அரிசி பானையில் போட்டு வைக்கவும். அரிசி அளக்கும் படியில் கட்டாயம் சாஸ்திரத்திற்கு இரண்டு அரிசிகள் இருக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களே இந்த மாதிரியான வளையலை மட்டும் கையில் போடுங்கள் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |