வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

Updated On: July 6, 2022 12:27 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

அக்னி நட்சத்திரம் | Agni Natchathirathil Enna Seiyalam

கோடை காலம் ஆரம்பித்தவுடன் அக்னி நட்சத்திரமும் ஆரம்பமாகி விடும். இந்த அக்னி நட்சத்திரம் நடக்கும்போது பெரும்பாலும் மக்கள் வெளியில் வர யோசிப்பார்கள், ஏனெனில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ம் தேதி ஆரம்பமாகி மே மாதம் 28-ம் தேதி முடிவடைகிறது. இந்த அக்னி நட்சத்திரத்தில் பலருக்கும் எந்த காரியங்களை செய்யலாம், செய்யக்கூடாது என்று குழப்பத்தில் இருப்பீர்கள், உங்களின் குழப்பத்திற்கு விடை கொடுக்கும் விதமாக இந்த பதிவில் அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

அக்னி நட்சத்திரம்

  • பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் தினத்தை தான் நாம் அக்னி நட்சத்திரம் என்கிறோம்.  25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும், மற்ற நாட்களை விட சூரிய பகவான் இந்த நாட்களில் அதிக வெப்பத்தை வெளியிடுவார்.
  • வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். மேலும் இந்த காலத்தை கத்தரி வெயில் என்றும் அழைப்பதும் உண்டு.
  • இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 04-ம் தேதி 05.55 AM ஆரம்பமாகி மே மாதம் 28-ம் தேதி முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?

  • திருமணம், நிச்சயதார்த்தம், திருமண பொருத்தம் போன்றவை செய்யலாம்.
  • பூணுல் போடுதல், ஒப்புதல் தாம்பழம், மஞ்சள் நீராட்டு விழா, யாகங்கள்  செய்யலாம்.
  • பெண் பார்க்க போவது, வளைகாப்பு, சத்திரங்கள் கட்டுதல், வாடகை வீட்டுக்கு குடி போவது போன்றவற்றை செய்யலாம்.
  • சுப காரியங்கள் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் அதற்கான முயற்சிகளை நீங்கள் அக்னி நட்சத்திரத்தில் செய்யலாம்.

 

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை?

  • செடி, கொடி மற்றும் மரங்களை வெட்டவோ, அழிக்கவோ கூடாது. ஏனெனில் இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், மரங்கள் இருந்தால் தான் வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும்.
  • நார் உரிக்க கூடாது, விதை விதைக்க கூடாது, கிணறு, குளம் போன்றவற்றை உருவாக்க கூடாது. இதை நீங்கள் வெயில் காலத்தில் செய்தாலும் அதற்கு பலன் கிடைக்காது.
  • நிலம் மற்றும் வீடுகளை பராமரிக்க கூடாது. மொட்டை அடித்தல், காது குத்துதல், வீடு கிரகப்பிரவேசம் செய்ய கூடாது.
  • பூமி பூஜை செய்வது, புது வீடு குடிபோவது, கிணறு வெட்டுவது போன்ற எந்த காரியத்தையும் செய்ய கூடாது.
  • வாகனம் வாங்க கூடாது. கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள் அல்ல.
  • முடிந்தவரை இந்த அக்னி நட்சத்திரத்தில் நெடுந்தூரம் வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • இந்த அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறும்.

அக்னி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கலாமா?

  • இந்த காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், கருவுற்ற பெண்ணிற்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும், அதனால் தான் அக்னி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க கூடாது என்கிறார்கள்.
அக்னி நட்சத்திரம் 2022

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now