வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2026-ம் ஆண்டிற்கான அமாவாசை நாட்களின் முழு அட்டவணை..

Updated On: May 4, 2026 11:54 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 Amavasai For This Month 2026 in Tamil

Today Amavasya Time in Tamil: மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை என்று சொல்லப்படுகிறது. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.

அமாவாசை வழிபடும் முறை

இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் ஆத்மாவிற்கு முக்திகிடைக்காது.

சரி இந்த பதிவில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களை அதாவது, அமாவாசை 2025 ஆண்டிற்கான  நேரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை பார்த்து தங்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு முறையாக வழிபடுங்கள் நன்றி வணக்கம்…

அமாவாசை என்றால் என்ன.? | இன்று அமாவாசை எத்தனை மணிக்கு பிறக்கிறது

அமாவாசை என்பது இந்து மதத்தில் முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்துக்கள் முறைப்படி அமாவாசை தினத்தில் சந்திரனை காணாத நாளாக இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக இருக்கிறது. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக வழிபாடு மற்றும் சடங்குகளை செய்கிறார்கள். இந்த தினத்தில் நம்முடைய முன்னோர்கள் வருவதாக ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. இந்த நாளன்று நம்முடைய முன்னோர்களுக்காக வடை பாயசத்தோடு உணவுகளை சமைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுவார்கள். மேலும் இந்த நாளன்று காலையில் சாப்பிடாமல்  விரதம் இருப்பார்கள். இப்படி வழிபடுவதால் நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கிறது.

எல்லா மாதத்திலும் வரும் அமாவாசையை விட புரட்டாசி, தை, ஆடி போன்ற மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

இந்த வருடத்திற்கான அமாவாசை நேரம் | Tomorrow Amavasya Time in Tamil

நாள்  அமாவாசை நேரம் 
ஜனவரி 18, ஞாயிறு  Jan 18, 12:04 am – Jan 19, 1:21 am
பிப்ரவரி 16, திங்கள் Feb 16, 5:34 pm – Feb 17, 5:31 am
மார்ச் 18, புதன்  Mar 18, 08:25 am – Mar 19, 6:53 am
ஏப்ரல் 16, வியாழன்  Apr 16, 08:11 pm – Apr 17, 05:21 Pm
மே 16, சனி  May 16, 05:11 am – May 17, 01:31 am
ஜூன் 14,ஞாயிறு  Jun 14, 12:20 pm – Jun 15, 08:24 am
ஜூலை 13, திங்கள்  Jul 13, 6:50 pm – Jul 14, 03:13 pm
ஆகஸ்ட் 12, புதன்  Aug 12, 01:53 am – Aug 12, 11:06 pm
செப்டம்பர் 10, வியாழன்  Sep 10, 10:33 am – Sep 11, 08:57 am
அக்டோபர் 09, வெள்ளி  Oct 09, 09:36 pm – Oct 10, 9:20 pm
நவம்பர் 08, ஞாயிறு Nov 08, 11:28 am – Nov 09, 12:32 pm
டிசம்பர் 08, செவ்வாய்  Dec 08, 4:13 am – Dec 09, 06:21 am
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now