அஷ்டமி நவமி 2022 | Ashtami 2022 Navami 2022..!
Ashtami Navami dates: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அஷ்டமி நவமி 2022-ல் ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த கிழமைகளில் வருகிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இருப்பினும் அதே நாளில் எந்த ஒரு நல்ல காரியங்களை செய்வதற்கு நாம் அனைவரும் மிகவும் யோசிப்போம். அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். எந்த ஒரு செயலையும் அஷ்டமி, நவமி திதிகளில் செய்தால் விரைவில் முடிவிற்கு வராமல் தொடர்ந்துகொண்டே போகும் என்பதால் அந்த நாளில் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். அந்த வகையில் இப்போது 2022-ம் ஆண்டில் வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை நவமி, தேய்பிறை நவமி போன்ற நாட்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் எப்போது வருகிறது என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க..!
அஷ்டமி நவமி 2022 | Ashtami Navami Dates 2022 | ||
மாதம் | அஷ்டமி 2022 (Ashtami 2022) | நவமி 2022 (Navami 2022) |
ஜனவரி | 10.01.2022 – திங்கள் (வளர்பிறை அஷ்டமி) | 11.01.2022 – செவ்வாய் (வளர்பிறை நவமி) |
25.01.2022 – செவ்வாய் (தேய்பிறை அஷ்டமி) | 26.01.2022 – புதன் (தேய்பிறை நவமி) | |
பிப்ரவரி | 08.02.2022 – செவ்வாய் (வளர்பிறை அஷ்டமி) | 09.02.2022 – புதன் (வளர்பிறை நவமி) |
24.02.2022 – வியாழன் (தேய்பிறை அஷ்டமி) | 25.02.2022 – வெள்ளி (தேய்பிறை நவமி) | |
மார்ச் | 10.03.2022 – வியாழன் (வளர்பிறை அஷ்டமி) | 11.03.2022 – வெள்ளி (வளர்பிறை நவமி) |
25.03.2022 – வெள்ளி (தேய்பிறை அஷ்டமி) | 26.03.2022 – சனி (தேய்பிறை நவமி) | |
ஏப்ரல் | 09.04.2022 – சனி (வளர்பிறை அஷ்டமி) | 11.04.2022 – ஞாயிறு (வளர்பிறை அஷ்டாமி) |
24.04.2022 – ஞாயிறு (தேய்பிறை அஷ்டமி) | 25.04.2022 – திங்கள் (தேய்பிறை நவமி) | |
மே | 09.05.2022 – திங்கள் (வளர்பிறை அஷ்டமி) | 10.05.2022 – செவ்வாய் (வளர்பிறை நவமி) |
23.05.2022 – திங்கள் (தேய்பிறை அஷ்டமி) | 24.05.2022 – செவ்வாய் (தேய்பிறை நவமி) | |
ஜூன் | 07.06.2022 – செவ்வாய் (வளர்பிறை அஷ்டமி) | 08.06.2022 – புதன் (வளர்பிறை நவமி) |
22.06.2022 – செவ்வாய் (தேய்பிறை அஷ்டமி) | 23.06.2022 – புதன் (தேய்பிறை நவமி) | |
ஜூலை | 07.07.2022 – வியாழன் (வளர்பிறை அஷ்டமி) | 08.07.2022 – வெள்ளி (வளர்பிறை நவமி) |
21.07.2022 – வியாழன் (தேய்பிறை அஷ்டமி) | 22.07.2022 – வெள்ளி (தேய்பிறை நவமி) | |
ஆகஸ்ட் | 05.08.2022 – வெள்ளி (வளர்பிறை அஷ்டமி) | 06.08.2022 – சனி (வளர்பிறை நவமி) |
19.08.2022 – வெள்ளி (தேய்பிறை அஷ்டமி) | 20.08.2022 – சனி (தேய்பிறை நவமி) | |
செப்டம்பர் | 03.09.2022 – சனி (வளர்பிறை அஷ்டமி) | 04.09.2022 – ஞாயிறு (வளர்பிறை நவமி) |
18.09.2022 – ஞாயிறு (தேய்பிறை அஷ்டமி) | 19.09.2022 – திங்கள் (தேய்பிறை நவமி) | |
அக்டோபர் | 03.10.2022 – திங்கள் (வளர்பிறை அஷ்டமி) | 04.10.2022 – செவ்வாய் (வளர்பிறை நவமி) |
17.10.2022 – செவ்வாய் (தேய்பிறை அஷ்டமி) | 18.10.2022 – புதன் (தேய்பிறை நவமி) | |
நவம்பர் | 01.11.2022 – செவ்வாய் (வளர்பிறை அஷ்டமி) | 02.11.2022 – புதன் (வளர்பிறை நவமி) |
16.11.2022 – புதன் (தேய்பிறை அஷ்டமி) | 17.11.2022 – வியாழன் (தேய்பிறை நவமி) | |
டிசம்பர் | 01.12.2022 – வியாழன் (வளர்பிறை அஷ்டமி) | 02.12.2022 – வெள்ளி (வளர்பிறை நவமி) |
16.12.2022 – வெள்ளி (தேய்பிறை அஷ்டமி) | 17.12.2022 – சனி (தேய்பிறை நவமி) |
நவமி திதியில் என்ன செய்யலாம்:
நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. ஆனால் ஆன்மீக காரியங்களுக்கு ஏற்ற நாள் இந்த நவமி திதி.
பலன்:
ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ அல்லது தோஷத்துடன் இருந்தாலோ நவமி திதி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
வழிபாடு:
நவமி திதியில் உங்களுக்கு உரிய தெய்வத்திற்கு பிரார்த்தனை கடனாக உயிர் பலிகொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகளை செய்து வரலாம்.
மேலும் நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
நவமி திதிக்கான தெய்வம்:
ஏதேனும் ஒரு காரியம் தொடங்கும் முன் நவமி திதியின் தெய்வமான சரஸ்வதி தேவியை வணங்கி செயல்பட்டால் அனைத்து காரியமும் நல்ல விதமாக முடியும்.
அஷ்டமி நாளில் என்ன செய்யலாம்:
அஷ்டமி திதி 2022: அஷ்டமி திதியானது அழிக்கும் தன்மையை கொண்டது. அஷ்டமி திதியானது போர் துவங்குவதற்கு, காவல் துறைக்கு செல்வதற்கு, தீய செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு, கடன் தொகைகளை அடைப்பதற்கு இந்த அஷ்டமி திதி பயன்படுகிறது. இதனை வைத்தே ஜோதிட வல்லுநர்கள் நல்ல காரியங்களை அஷ்டமி திதியில் செய்ய வேண்டாம் என்று கூறுவார்கள்.
பூஜை:
அஷ்டமி திதியில் ஒரு செயலை தொடங்க வேண்டும் என்று நினைத்தாலும், வெளிப்பயணம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் விநாயகர் அல்லது துர்க்கை பாதங்களில் ஒரு எலுமிச்சை பழத்தினை வைத்து பூஜை செய்த பின்னர் அதை கைகளில் வைத்துக்கொண்டு நினைத்த செயலை தொடங்கலாம். நினைத்த காரியம் வெற்றியில் முடிந்தவுடன் ஓடுகின்ற நீரில் கரைத்துவிட வேண்டும்.
வழிபாடு:
துர்காஷ்டமி, அஷ்டமி நாளில் பைரவரை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |