வீட்டில் பணம் கஷ்டம் வராமல் இருக்க இதை செய்யுங்க

Advertisement

அதிர்ஷ்டம் தரும் மரங்கள்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே.! அனைவரும் வீட்டிலும் மரங்கள், செடிகள் வளர்ப்போம். அழகுக்காகவும், நமக்கு பயன் அளிக்கும் மரங்களாக வளர்ப்போம். சில மருத்துவ குணம் நிறைந்த மரங்களை வளர்ப்போம். பெரும்பாலான வீடுகளில்  வேப்ப மரம், வாழை மரம், தென்னை மரம்  இருக்கும். இன்னும் பல மரங்கள் வளர்ப்போம். ஆனால் இந்த மாதிரியான மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்தால் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமாம் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் செடிகள் எது என்று உங்களுக்கு தெரியுமா..?

கறிவேப்பிலை மரம்:

பெரும்பாலான வீட்டில் கறிவேப்பிலை மரம் இருக்கும். சமையலுக்கு உதவும் என்று வளர்ப்பார்கள். அதே போல் பப்பாளி மரமும் இருக்கும். கறிவேப்பிலை மரத்தை ஆண் என்றும், பப்பாளி மரத்தை பெண் என்றும் சொல்வார்கள். ஒரே வீட்டில் இந்த இரண்டு மரங்களும் இருந்தால் வீட்டிற்கு நல்லது.

இந்த இரண்டு மரங்களும் காய்ந்து போக கூடாது. அப்படி காய்ந்து போனால் வீட்டில் துன்பங்கள் ஏற்படும்.

முட்கள் நிறைந்த செடிகள்:

வீட்டில் முட்கள் நிறைந்துள்ள கள்ளிச்செடி, விஷச்செடிகள், முட்செடிகள், அழகுக்காக வளர்க்கக்கூடிய முட்கள் உள்ள செடிகள் வளர்க்க கூடாது. இந்த செடிகளை வளர்த்தால் வருமானத்தை குறைவடையை செய்யும். பணத்தை குறைவடைய  செய்யும். இந்த மாதிரியான செடிகள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்.

தென்னை மரம் மற்றும் வாழை மரம்:

இந்த இரன்டு மரங்களும் இல்லாத வீடுகளே இருக்காது. இந்த இரண்டு மரங்களும் வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். குடும்பத்தில் வர கூடிய துன்பங்களை நீக்கும். தென்னை மரத்தையும், வாழை மரத்தையும் ஒன்று மட்டும் வளர்க்க கூடாது. தென்னைப்பிள்ளை இரண்டாக வளர்க்கும் போது தான் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்.

விநாயகருக்கு உகந்த பூக்கள்:

விநாயகருக்கு உகந்த செடிகளான தும்பை, சாமந்தி, பாதிரி, முல்லை, ஜாதி, தாமரை, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால் அதிர்ஷ்டம் தரும். நீங்கள் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டாமல் இருந்து அதனால் வரும்  பிரச்சனைகளை சரி செய்ய இந்த விநாயகர் செடிகள் உதவுகிறது. நீங்கள் வீட்டின் வாசலில் ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூக்களை வைத்து வந்தாலே அதிர்ஷ்டம் அளிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement