வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அதிர்ஷ்ட மழை பொழிய பொங்கல் அன்று இதை செய்திடுங்கள்..!

Updated On: January 9, 2025 7:08 PM
Follow Us:
athirstam vara
---Advertisement---
Advertisement

அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்

செல்வம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்து எதுமே பலன் கொடுக்கவில்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்..! இனிமேல் கவலை படாதீர்கள். வரும் பொங்கல் நாளிலிருந்து உங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா..? பொங்கல் அன்று சிலவற்றை தானமாக கொடுத்தால் அதிர்ஷ்ட மழை பொழிய பொழியும். அது என்ன தானம் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

தை பொங்கல் அன்று தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்:

அன்னதானம்:

அன்னதானம்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள். அதனால் பொங்கல் அன்று வயதானவர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் என்று யாருக்கு  வேண்டுமானாலும் உணவு வாங்கி கொடுக்க வேண்டும். வாங்கியும் கொடுக்கலாம் இல்லையென்றால் நீங்கள் சமைத்து வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

 முதியோர் இல்லம், ஆதரவற்ற இல்லம் போன்றவற்றிற்கு  அரிசியாகவோ அல்லது பருப்பு அல்லது தானியங்கள் போன்றவற்றை தானமாக கொடுத்தால் எண்ணற்ற நன்மைகள் வந்து சேரும். இல்லையென்றால் உணவாக வேண்டுமானாலும் கொடுக்கலாம்.  

இதையும் படியுங்கள் ⇒  பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கி விடுங்கள் அது உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்..! 

துணி தானம்:

துணி தானம்

வயதானவர்கள், குழந்தைகளுக்கு துணியை தானமாக கொடுக்கலாம். துணியை கொடுக்கலாம் என்று சொன்னவுடன் நீங்கள் பயன்படுத்திய பழைய துணி அல்லது கிழிந்து போன துணியை யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள். அதனால் பாவம் வந்து சேரும். புதிய துணி அல்லது நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருப்பீர்கள் அந்த மாதிரியான துணியை தானமாக கொடுக்கலாம்.

இந்த தானத்தை  முக்கியமாக யார் கொடுக்கலாம் என்றால் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறவர்கள், அடிக்கடி ஆப்ரேஷன் செய்கிறவர்கள், கண் திருஷ்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் துணி தானத்தை கட்டாயம் செய்ய வேண்டும்.  

கல்வி தானம்:

கல்வி தானம்

ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்யலாம். எவ்வளவோ மாணவர்கள் நோட்,புக் கூட வாங்க முடியமால் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம். நிறைய பேருக்கு யூனிபார்ம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு யூனிபார்ம் வாங்கி கொடுக்கலாம். உங்கள் சக்திக்கு எது முடியுமோ அதை செய்யுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள மூன்று தானத்தில் ஏதாவது ஒரு தானத்தை கூட செய்யலாம். உங்களால் முடியும் என்றால் மூன்று தானத்தையும் செய்யலாம். குறிப்பாக பொங்கல் அன்று இந்த தானத்தை செய்வதால் அதிர்ஷ்ட மழை பொழியும்.

இதையும் படியுங்கள் ⇒ மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் 2024 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now