கோவிலில் இதுபோன்ற விஷயங்களை செய்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Advertisement

கோவிலுக்கு செல்ல கூடாத நாட்கள்

அனைத்து உறவுகளுக்கும் அன்பு வணக்கம்..! பொதுவாக அதிகளவு கோவில்களுக்கு செல்வீர்கள்..! ஆனால் அங்கு செய்யும் தவறை பற்றி உங்களுக்கு தெரியாது..? அது என்ன தவறு என்று யோசிப்பீர்கள் ஆனால் சில தவறுகளை சாஸ்திரம் என்று நினைத்துக்கொண்டு அதைத்தான் செய்து வருகிறோம்..! பொதுவாக சிலர் கோவில்களுக்கு மிகவும் பக்தியுடன் செல்வார்கள் ஆனால் அவர்கள் கூட இந்த தவறை செய்வார்கள் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க நாம் செய்யும் தவறை பற்றி பார்ப்போம்..!

கோவிலில் சாமி கும்பிடும் முறை:

சாமி கும்பிடுவது

பொதுவாக கோவில்களுக்கு சென்றால் அங்கு விழுந்துசாமியை வழிபடுவீர்கள் ஆனால் ஆம் கோவிலில் வாங்குவது நல்லது தானே என்று நினைப்பீர்கள் அதில் ஒன்றும் தவறு இல்லை தான்.   ஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால் நம்மைவிட பெரியவர்களை பார்த்தால் உடனே கையை எடுத்து கும்பிடுவோம் அல்லது காலில் விழுந்து கும்பிடுவோம் ஆனால் அது முற்றிலும் தவறு. நீங்கள் கோவில்களுக்கு சென்றால் யாரையும் பார்த்து கால்லில் விழுந்து அல்லது கை எடுத்து கும்பிடக்கூடாது.    பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவில்களுக்கு செல்லக்கூடாது அதேபோல் பெண்கள் தலையை விரித்து போட்டுகொண்டு செல்லக்கூடாது  இது போல் செய்தால் அது சாமிக்கு மிகவும் கோவத்தை அளிக்கும் இதுபோல் ஏன் செல்ல கூடாது  என்ற அறிவியல் காரணமும் உள்ளது அதிக தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஏன் கோவிலுக்கு செல்வதில்லை… காரணம் தெரியுமா..? தெரிந்துகொள்ளவும்.

அதேபோல் சிலர் பக்தியில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லது கோவில்களுக்கு செல்லாமல் இவர்களால் இருக்க முடியாது என்பதனால் இவர்கள் வீட்டில் ஏதேனும் கெட்ட காரியங்கள் நடந்தாலும் கோவில்களுக்கு செல்வார்கள் ஆனால் இது முற்றிலும் தவறு 30 நாட்கள் கோவில்களுக்கு செல்லக்கூடாது . இது தெரியும் 16 முடிந்தவுடன் கோவில்களுக்கு வருவார்கள் இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

அதேபோல் சிலர்  கோவில்களுக்கு செல்லவார்கள் ஆனால் சாமியை மட்டும் கும்பிட்டுவிட்டு வெறும் நெற்றியுடன் வருவார்கள் ஆனால் அது முற்றிலும் தவறானது. நெற்றியில் குங்குமம் அல்லது திருநீறு நெற்றியில் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் அசைய உணவு சாப்பிட்ட பின் கோவில்களுக்கு செல்ல கூடாது. திருமணம் ஆனவர்கள் தாம்பத்தியம் வைத்துக்கொண்டு குளிக்காமல் கோவில்களுக்கு செல்லகூடாது.

ஆண்கள் மது அருந்திவிட்டு அல்லது கைலியை கட்டிக்கொண்டு கோவில்களுக்கு செல்லக்கூடாது.

அதேபோல் கோவில்களுக்கு சென்று விட்டால் இறை சிந்தனையுடன் மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல் பக்தர்கள் எதிரில் செல்லும் போது இறைவனை வணங்க கூடாது. சாமியை பார்க்க பின் புறம் அல்லது குறுக்கே நின்று வழிபட கூடாது.

கோவிலுள் தரப்படும் பிரசாதத்தை தரையிலோ அல்லது கீழோ கொட்டக்கூடாது. அதைவிட முக்கியமானது நாம் செய்யும் தவறுகளில் இது நிச்சயம் இருக்கும் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தை குடித்துவிட்டு தலையில் தடவக்கூடாது.

எந்த கோவிலாக இருந்தாலும் அமராமல் வரக்கூடாது, அதேபோல் பிரகாரத்தை வேகமாக சுற்றிவர கூடாது.

 

கோவில் கனவில் வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement