உங்கள் கனவில் இதெல்லாம் அடிக்கடி வருகிறதா..! அப்போ நீங்கள் தான் பணமழையில் நனைய போகிறீர்கள்..!

Advertisement

இந்த கனவை அடிக்கடி காண்பீர்களா..?

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே கனவு இரவு தூங்கும் போது கனவு வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். அதில் அதிகாலையில் காண்கிற கனவுகள் பழிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.நாம் காண்கிற எல்லா கனவும் அதிர்ஷ்டமான பலன்களை தராது. ஆனால் ஒரு சில கனவுகள் மட்டும் அதிர்ஷ்டம்  மற்றும் பணக்காரனாக ஆக போகிறீர்கள் என்று சில அறிகுறிகள் காட்டும். அது என்னென்ன கனவுகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா?

தோடு கனவில் வந்தால்:

இரவு தூங்கும் போது கனவில் காதில் போடும் தோடுகளை கண்டால் பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் இந்த கனவை கண்ட நாளிலிருந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மோதிரம் அணிவது போல் கனவு:

கனவில் நீங்கள் மோதிரம் அணிவதாக கனவு கண்டால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். மோதிரம் கனவில் வந்தாலே லட்சுமி கடவுளின் பார்வை உங்கள் மீது இருக்கும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

பாம்பை கனவில் கண்டால் என்ன அர்த்தம்:

பாம்பை கனவில் பலருக்கும் பயமாக இருக்கும். ஆனால் பாம்பை பணம் வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் பாம்பு இருப்பதாக கனவு வந்தால் பணம் உங்களை நாடி வருமாம்.

பால் குடிப்பது போல் கனவு கண்டால்:

இரவு தூங்கும் போது பால் குடிப்பது போல் கனவு கனவு கண்டால் சீக்கிரமாக பணக்காரனாக ஆக போகிறீர்கள் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்:

தங்கத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் லட்சுமி கடவுளின் அருள் எப்பொழுதும் இருக்கும். சீக்கிரமாக கோடீஸ்வரனாக ஆக போகிறீர்கள் என்று அர்த்தமாம்.

ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன்:

கனவில் ரோஜா பூ மற்றும் தாமரை பூ வந்தாலே லட்சுமி கடவுளின் அருள் கிடைக்குமாம். லட்சுமி அருள் இருந்தாலே உங்கள் வீட்டில் பணம் மழை பொழியும்.

விளக்கு கனவில் வந்தால்:

உங்கள் கனவில் விளக்கு எறிவது போல் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் பணம் உங்களை தேடி வரும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

 

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 
Advertisement