எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?

Ethanai Porutham Irunthal Thirumanam Seiyalam

Ethanai Porutham Irunthal Thirumanam Seiyalam

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்? என்பதை பற்றி படித்தறியலாம். ஜாதகம் ரீதியாக திருமணத்திற்கு 12 பொருத்தம் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த 12 பொருத்தங்களும் அனைவருக்கும் அமைவதில்லை. ஆகவே இந்த 12 பொருத்தங்களில் திருமணத்திற்கு மிக முக்கியமாக பார்க்கப்படும் 5 பொருத்தங்கள் இருந்தாலே திருமணம் செய்யலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க அந்த ஐந்து பொருத்தங்கள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்.

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்:

திருமண பந்தத்தில் இணைய விரும்பும் ஆண், பெண் இருவருக்கும் 12 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அவர்களது மன பொருத்தம் ஒத்துப்போகிறது என்றாலே போதுமானது தான்.

இருந்தாலும் மனமானது அடிக்கடி மாறக்கூடியது ஒரே நிலையில் இருப்பதில்லை என்பதற்காக, வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சரி, ஜாதகத்தை அதிகம் நம்புபவர்களும் சரி திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இருவரது திருமண பொருத்தம் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

ஆகவே திருமணம் செய்யும் இருவருக்கும் அவர்களது ஜாதகத்தில் தின பொருத்தம், கணப்பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜி பொருத்தம் ஆகிய ஐந்து பொருத்தங்கள் இருந்தாலே போதும் அவ்விருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம். இருவரது வாழ்க்கையும் சந்தோசமானதாக இருக்கும்.

முகூர்த்த நாட்கள் 2021

ஒருவரது வாழ்க்கையில் திருமணத்தின் முக்கிய நோக்கம் என்ன?

ஒரு சராசரி மனிதனால் தனித்து வாழ முடியாது, துணை அவசியம் என்ற நிலையில், துணை தேடுகிறான். இறுதி வரை பிரியாத துணை, திருமண பந்தத்தில் மட்டுமே கிடைக்கும். பெற்றோருக்குப் பிறகு, அன்பான, நம்பிக்கையான, ஆதரவான ஒருத்தி /ஒருவன் வேண்டும், அந்த ஒருத்தி / ஒருவன் வாழ்க்கைத்துணையாக மட்டுமே இருக்க முடியும்.

இது திருமணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதைத்தவிர, மனைவி, மக்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான, இனிமையான வாழ்வு ஒவ்வொருவருக்கும் அவசியம் –  மனித இனம் வளர்வதற்கும், மலர்வதற்கும் திருமணம் தேவை.

திருமண லக்ன பொருத்தம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்