கீழே கிடக்கும் பணத்தை எடுப்பதால் என்னெல்லாம் நடக்கும் ஆன்மீகம் கூறும் ரகசிய தகவல்..! Finding Money On Road Astrology..!
Is Finding Money Good Luck: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கீழே கிடக்கும் பணத்தை எடுப்பதால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டா? அதிர்ஷ்டம் இல்லையா? இதனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றி ஆன்மீகம் கூறும் சில தகவலை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். கீழே கிடக்கும் நாணயமோ அல்லது பணத்தையோ எடுப்பதால் ஏதேனும் தீங்கு நடந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கின்ற இயல்பான விஷயம் தான். சரி வாங்க நண்பர்களே இப்போது கீழே கிடக்கும் பணத்தினை எடுப்பதால் நடக்கும் விஷயங்களை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கீழே விழுந்திருக்கும் பணத்தை எடுக்கலாமா?
நாம் அனைவருமே சிறிய வயதில் இருந்து அடுத்தவர்களின் பணத்தை எடுப்பதில் மனதில் சிறிய தடுமாற்றம் இருக்கும். அடுத்தவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தினை நாம் எடுப்பதால் அவர்கள் என்னவெல்லாம் நமக்கு சாபம் விடுவார்கள் என்ற பயம் மட்டும் எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் போலத்தான் மற்றவர்களும் உழைப்பார்கள் என்ற மனநிலை நமக்கு இயல்பாகவே வந்துவிடும்.
பணத்தை எடுத்தால் அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டம் இல்லையா?
கீழே கிடந்து நாம் எடுக்கும் பணம் நமக்கு அதிர்ஷ்டத்தை தான் தரும். நமக்கு அதிர்ஷ்டமான நேரத்தில் தான் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் செல்வ நாணயங்கள் பூமாதேவியின் மூலமாக நமக்கு கிடைக்கின்றன. பணத்திற்கோ, நாணயத்திற்கோ எந்த வித தீட்டுகளும் கிடையாது. கீழே கிடக்கும் பணம் அல்லது நாணையத்தினை எடுப்பதற்கு எந்த தயக்கமும் படவேண்டிய அவசியம் இல்லை.
மன உளைச்சல் நீங்க:
இந்த கீழே கிடக்கும் பணம் யாருடையது என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் அந்த பணம் நமக்கு சொந்தமானதாகும். அந்த பணம் யாருடையது என்று தெரியாமல் இருக்கும் நிலையிலும் பிறர் உழைத்த பணத்தினை நாம் எடுத்து பயன்படுத்த நமக்கு எப்போதும் மனம் வராது. அந்த பணத்தினை எடுப்பதால் மனதானது எப்போதும் உளைச்சலாக இருக்கும்.
கீழே எடுக்கும் எதார்த்தமான பணத்தினை பயன்படுத்தாமல் நீரில் கழுவி பத்திரமாக எடுத்துவைத்து கொள்ளவும். நீங்கள் கீழே எடுக்கும் ரூபாய் அளவிற்கே தாங்கள் உழைத்த பணத்தினில் இருந்து எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்துவிட்டால் மன உளைச்சல் இருக்காது.
புண்ணியம் கிடைக்கும்!!!
நீங்கள் கீழே கிடந்து ஒரு ரூபாய் எடுத்தாலும் அதை பத்திரமாக வைத்துக்கொண்டு தங்களிடம் இருக்கும் வேறு ஒரு ரூபாயை கோவிலில் இருக்கும் உண்டியலில் போடவும். 500 ருபாய் எடுத்தால் 500 ரூபாயும் உண்டியலில் போடவேண்டும். கோவில் உண்டியலில் போடுவதால் நமக்கு புண்ணியம் தான் கிடைக்கும்.
கீழே கிடந்த பணம் நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியது என்பதால் அதை பத்திரப்படுத்தி விட்டு வேறு பணத்தினை கோவில் உண்டியலில் சேர்க்கவும். இது போன்று செய்வதால் இதை விட பல மடங்கு பணம் நமக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இது போன்று நமக்கு கிடைப்பது தான் உண்மையான அதிர்ஷ்டம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |