சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்காதாம்.! அப்புறம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க

Advertisement

Hair in Food Astrology in Tamil

சமைக்கும் பொழுது கவனமாக சமைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் சமைக்கும் பொழுது தலையை விரித்து கொண்டு சமைக்க கூடாது என்று சொல்வார்கள், தலையிலும் கை வைக்காமல் சமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் சமைக்கும் பொழுது உணவில் முடி விழுந்து விட கூட கூடாது என்பதற்காக தான் சொல்வார்கள். இருந்தாலும் தவறுதலால் முடி விழுந்து விட கூடும். இதனை சமைக்கும் பொழுது முடி விழுந்தது தெரிவதில்லை. உணவு பரிமாறும் பொழுது தான் முடி விழுந்தது தெரியும். அப்படி உணவு பரிமாறும் பொழுது முடி வந்தால் உறவுகள் நீடிக்கும் என்று சொல்வார்கள். இதனை பற்றி ஆன்மிகம் தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

எந்தெந்த கிழமையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்..!

உணவில் முடி இருந்தால் என்ன பலன்:

Hair in Food Astrology in Tamil

சாப்பிடும் போது முடி இருந்தால் உறவு நீடிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் ஜோதிடத்தில் சனியுடன் ஒப்பிடப்படுகிறது. அதனால்  உணவில் அடிக்கடி முடி இருந்தால் சனி துரத்துகிறது என்று அர்த்தம். உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக வர போவதைக் குறிப்பதாகும். 

இன்னும் சிலர் சாப்பிடும் உணவில் கற்களும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் உணவில் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில சமயங்களில் கற்கள் வந்தால் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

ஊனமுற்றவர்களை கேலி செய்பவர்கள், பெற்றோர்களை அவமதிப்பவர்கள், வீட்டில் பெண்களை இழிவு படுத்துபவர்கள், பணத்தை ஏமாற்றுபவர்கள், கெட்ட வார்த்தைகளை பேசுபவர்கள், வாயில்லா ஜீவராசிகளை துன்புறுத்துபவர்கள், நாய்களை கை கொண்டு அடிப்பவர்கள், மது அல்லது மாமிச பழக்கம் உள்ளவர்கள் போன்றவர்களை சனி பகவான் உரிய தண்டனையை வழங்குகிறார்.

 சனி தோஷத்திலிருந்து பாதுகாத்து கொள்ள சனி கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வரலாம். சனிக்கிழமை நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்து வந்தாலே சனியின் பிரச்சனையிலுருந்து விடுபடலாம்.  

பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement