நாக தோஷம் கண்டறிவது எப்படி? | Naga Thosam Irukiratha Ena Eppadi Kandu Pidipathu?
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் தோஷங்களில் மிக முக்கியமான தோஷமாக இருக்கும் நாக தோஷம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது அல்லது ஜாதகம் பார்க்கும் போதும் சர்ப்ப தோஷம் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்பதை பார்த்து அதற்கான பரிகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த தொகுப்பில் சர்ப்ப தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான பரிகாரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.
நாக தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுப்பிடிப்பது?
- பாம்புகள் ஒரு சிலருக்கு மட்டும் அடிக்கடி தென்படும், அப்படிப்படுபவர்களுக்கு சர்ப்ப தோஷம் இருக்கலாம்.
- லக்னம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம் போன்ற ஸ்தானங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அது நாக தோஷத்திற்கான அறிகுறியாகும்.
- 4, 13, 22, 32 அல்லது கூட்டு எண் 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நாகங்கள் அடிக்கடி தென்படும். அப்படி தென்பட்டால் அந்த ஜாதககாரருக்கு ஜாதகத்தில் நாகதோஷம் இருக்கலாம்.
- சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகக்காரருக்கு உடம்பில் பாம்பு வடிவிலான மச்சம் அல்லது தழும்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
- ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் அது நாகதோஷம் இருப்பதற்கான அறிகுறியாகும். இது ஆண் மற்றும் பெண் நாகம் ஒன்றாக இருக்கும் போது அதை துன்புறுத்துவதால் ஏற்படும்.
- புத்திர ஸ்தானத்தில் ராகு இருந்தாலும் நாகதோஷம் ஏற்படும். இது பாம்புகள் தனது குட்டிகளோடு இருக்கும் போது அதை துன்புறுத்துவதால் ஏற்படும்.
- ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் நாகதோஷம் ஏற்படும். இது பாம்புகள் பசிக்காக உணவு தேடும் போது அதை துன்புறுத்துவதால் ஏற்படும்.
- நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம், திருமணத்தடை மற்றும் தொழில் அல்லது வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
நாக தோஷம் நிவர்த்தி:
- சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அருகில் உள்ள ஸ்தலங்களில் பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுவது நல்லது. இந்த பரிகாரத்தை 11 வாரம் செய்து வந்தால் திருமண தடை விலகும். மேலும் நீங்கள் இந்த பரிகாரத்தை திருநாகேஸ்வரம், திருக்காளகஸ்தி, கருமாரியம்மன் கோவில் போன்ற ஸ்தலங்களில் வழிபடுவது நல்லது.
- பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக் கொண்டிருப்பது போல உள்ள சிலையை அரசமரத்தின் அடியில் வைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நாகதோஷம் விலகும்.
- நாக சிலைக்கு பாலாபிஷேகம் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் சர்ப்ப தோஷத்தால் ஏற்பட்ட திருமணத்தடை உடனடியாக விலகும். வெள்ளிக்கிழமை பாம்பு புற்றுக்கு பால் வைத்தும் வழிபடலாம்.
நாக தோஷம் நீங்க மந்திரம்:
ஓம் ரூபப் பிரபவம் நமஹ!
ஓம் சாரும் கேவும் நமஹ!
ஓம் சரவும் பரவும் நமஹ!
ஓம் நய்யும் மெய்யும் நமஹ!
ஓம் ஜெகமும் புரமும் நமஹ!
ஓம் காளத்தி மேளத்தி நமஹ!
ஓம் ஜாலும் மேலும் நமஹ!
ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ!
ஓம் சரகத்தி பாபத்தி நமஹ!
ஓம் சரசாலி பிரசாலி நமஹ!
ஓம் ஓம் ஓம்!!
செவ்வாய் தோஷம் கண்டுபிடிப்பது எப்படி |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |