இரவு தூக்கத்தில் கனவு
வணக்கம் நண்பர்களே..! இன்று நம்முடைய ஆன்மிக பதிவில் தூக்கத்தில் கெட்ட கனவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகிறோம். இரவு தூங்குவதற்கு முன் நாம் எதை பற்றி அதிகமாக நினைத்து கொண்டு இருக்கிறார்களோ அது தான் தூக்கத்தில் கனவாக வருகிறது. அதுபோல ஒருசிலருக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்று சொல்லி புலம்புவார்கள். மனஅழுத்தம் காரணமாக தான் தூக்கம் வராமல் இருக்கும். அலுவலகத்தில் வேலை சரியாக செய்யவில்லை என்றால் கூட அதை நினைத்துக்கொண்டே இருப்பார்கள். தூங்கும் போது எதை பற்றியும் நினைத்து கவலை பட கூடாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் காலையில் சரி ஆகிவிடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்த்து கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா?
கெட்ட கனவுகள் வராமல் இருக்க:
நீங்கள் தூங்கும் போது கெட்ட கனவுகள் வராமல் இருக்க தலையணைக்கு அடியில் இந்த 2 இலைகளை மட்டும் வைக்க வேண்டும்.
உங்களுக்கு நல்ல தூக்கம் என்பது இல்லை தூங்கும் போது கெட்ட கனவாக இருக்கிறது என்றால் வேப்பிலை, புளியஇலை இந்த இரண்டினையும் ஒரு மஞ்சள் துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைக்க வேண்டும். நீங்கள் மெத்தையில் படுத்தாலும் அதற்கு அடியில் வேப்பிலை, புளியஇலை இரண்டையும் வைத்துகொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு ஒருமுறை இலைகளை மாற்ற வேண்டும். இப்படி செய்யும் போது கெட்ட கனவுகள் வருவதை தடுக்க முடியும்.
கனவு தொல்லை நீங்க:
நிம்மதியான தூக்கம் வரவில்லை கனவு தொல்லையாக இருக்கிறது என்றால் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு மழை வரும் போது அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அதில் கொஞ்சம் கல் உப்பை போட்டு நன்றாக கரைத்து வீட்டில் மூளை முடுக்குகளில் தெளிக்க வேண்டும்.
தூங்கும்போது எப்போதும் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள். கிழக்கு பக்கம் தலை வைத்து படுத்துக்கொள்ளுங்கள் அப்போது நிம்மதியான தூக்கம் வரும்.
வீட்டில் கெட்ட சக்தி விலக:
வீட்டில் கெட்ட சக்தி இருப்பதானால் தூக்கம் வரவில்லை என்பது போல நீங்கள் உணர்ந்தால் உடனே வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியத்தை வீட்டில் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் நிம்மதியான தூக்கத்தை தூங்கலாம். கெட்ட கனவுகள் தூக்கத்தில் வருவதும் குறைந்து விடும்.
இரவு தூங்கும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்:
இரவு தூங்குவதற்கு முன் ஹனுமானை மனதார நினைத்து கொள்ளுங்கள். அது மாதிரி தூங்க போகும் 5 நிமிடத்திற்கு முன் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தை உச்சரித்தால் நல்ல தூக்கம் வரும் மற்றும் உங்களுக்கு நன்மையை தரும். அதுமட்டுமில்லாமல் மன அமைதி பெரும்.
உடலில் பிரச்சனை உள்ளவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது. அப்படி இருக்கும்போது அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் பகல் முழுவதும் படுக்கையிலே இருக்காமல் எழுந்து நடக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் இரண்டு கால்களையும் சிறிது நேரம் வெது வெதுபான தண்ணீரில் நனைத்து விட்டு அதன் பிறகு தூங்க செல்லுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |