பெண்களுக்கு கால்விரல்களின் இரண்டாவது விரல் பெரியதாக இருக்கிறதா.! அப்போ இதை பாருங்கள்.!

Advertisement

கால் விரல் பலன்கள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் பெண்களுக்கு கால் கட்டை விரல்களின் பக்கத்தில் இருக்கும் விரல் பெரியதாக இருந்தால் அவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் காலின் இரண்டாவது விரல் பெரியதாக இருந்தால் கணவனுக்கு அடங்க மாட்டாள் என்று சொல்வார்கள். இதெல்லாம் ஒன்று உண்மையில்லை என்று நம்ப மாட்டோம். ஆனால் இப்படி காலின் இரண்டாவது விரல்களை வைத்து அவர்களின் குணங்களை தெரிந்து கொள்ளலாம்.

காலின் இரண்டாவது விரல் குணங்கள்:

காலின் இரண்டாவது பெரியதாக  உடையவர்கள் எந்த செயலையும் திறமையாக கையாளுவார்கள். இவர்கள் ஒரு நாள் கூட சும்மா இருக்க மாட்டார்கள். நேரத்தை வீணாக கழிக்க மாட்டார்கள்.

இவர்கள் எல்லா துறைகளையும் பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். புதிது புதிதாக விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ கால் விரல் ஜோதிடம்

இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்களின் முகத்தை பார்த்தாலே நமக்கு இரு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் இவர்களிடம் தெரியாத விஷயத்தை பற்றி கேட்டால் அதை பற்றி முழு விவரத்தையும் ஆராய்ந்து சொல்வார்கள்.

ஒரு விஷயத்தை ஆரம்பிக்கிறார்கள் என்றால் அதை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு தான் அந்த செயலை ஆரம்பிப்பார்கள்.

இவர்களிடம் மற்றவர்கள் சொல்லும் விஷயத்தை நம்ப மாட்டார்கள். அதில் என்ன உண்மை இருக்கிறது, என்ன பொய் இருக்கிறது என்று ஆராய்வார்கள்.

இவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவர்கள் முன்னோர்கள் முன்னிலையில் பேசும் போது வாயாடி என்று சொல்வார்கள். ஆனால் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்களை ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க சொன்னால் திறமையாக செய்ய கூடியதில் வல்லவராக இருப்பார்கள். மிகுந்த பேச்சாற்றலும், புத்தி கூர்மையுடனும் இருப்பார்கள்.

நிறுவனகமாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி இவர்களை கேட்டு தான் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். மேலும் இவர்கள் செய்யும் செயல்களை மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். இவர்களே அதற்கான முடிவுகளை ஆராய்ந்து எடுப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement